அன்வார் மானம் காப்பீர்: பிகேஆர் பேராளர்களுக்கு சைட் கோரிக்கை

வியாழக்கிழமை தொடங்கும் பிகேஆர் தேசிய காங்கிரஸுக்கு முன்னதாக அதில் கலந்துகொள்ளும் பேராளர்களுக்கு ஒரு திறந்த மடல் எழுதிய சைட் இப்ராகிம், கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் மாண்பைக் காக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

“உங்கள் தலைவர் அன்வார் இப்ராகிம் அடுத்த பிரதமர் ஆவதற்கு விடக்கூடாது என்ற நோக்கத்துடன் அவர்மீது தொடர்ந்து திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதை அணுக்கமாகக் கண்டு வருவதால்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்”, என்று முன்னாள் பிகேஆர் உருப்பினரான சைட் குறிப்பிட்டிருந்தார்.

நண்பர்களாகவும் தோழர்களுக்காகவும் கருதப்பட்டவர்கள் இழைத்துள்ள துரோகத்துக்கு அளவில்லை. அவர்களின் செயல் வெட்கக் கேடானது என்றவர் சாடினார்.

“நாட்டுக்குத் தரமான தலைமை தேவை என்று விரும்புவோர் இனியும் மெளனமாக இருக்க முடியாது”, என்றாரவர்.

பிரதமராவதற்குக் காத்திருக்கும் ஒருவரை அவர்கள் கேலிப் பொருளாக்குவதை இனியும் அனுமதிக்க முடியாது என்றவார் காட்டமாகக் கூறினார்.