பிகேஆர் இளைஞர் ஆண்டுக்கூட்டத் தொடக்கவிழாவில் அமளி

இன்று காலை பிகேஆர் இளைஞர் ஆண்டுக் கூட்டம் தொடங்கியபோது அதில் கலந்துகொள்ளச் சென்ற பதவிநீக்கம் செய்யப்பட்ட அவைத் தலைவர் மிர்சான் அட்லியும் அவரின் ஆதரவாளர்களும் வாசலில் நின்றிருந்த பாதுகாப்புக் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதனால் இரு தரப்புகளுக்குமிடையில் வாக்குவாதமும் தள்ளுமுல்லுவும் ஏற்பட்டது.

பிறகு செய்தியாளர்களிடம் அது பற்றிக் குறிப்பிட்ட மிர்சான் தன்னைத் தடுத்து நிறுத்தியது நியாயமல்ல என்று கூறினார்.

ஆனால், பிகேஆர் செயலகம், மிர்சானும் அவரின் ஆதரவாளர்களும் முறையான அனுமதி அட்டைகளை வைத்திருக்கவில்லை அதனால்தான் தடுத்து நிறுத்தப்பட்டதாக விளக்கியது.