பகை மறந்து நல்லிணக்கம் காண இதுவே சரியான தருணம்- பிகேஆர் மகளிர் தலைவர்

பிகேஆர் தலைவர்களிடையே காணப்படும் இணக்கம் விரைவில் கட்சியின் எல்லா நிலைகளிலும் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கிறார் பிகேஆர் மகளிர் அணித் தலைவர் ஹனிசா தல்ஹா.

“இரு தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து முன்செல்ல வேண்டிய வழிமுறைகள் பற்றி விவாதிப்பதைக் காண மனநிறைவாக இருந்தது. இதுதான் சரியான முடிவு”, என்றாரவர். ஹனிசா இன்று காலை மலாக்காவில் நடைபெறும் பிகேஆர் மகளிர் காங்கிரஸுக்கிடையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

புதன்கிழமை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், துணைத் தலைவர் அஸ்மின் அலி ஆகிய இருவருக்குமிடையிலான சந்திப்பு “சரியான நேரத்தில்” நடந்துள்ளது என்ற அவர், அது வார இறுதியில் கட்சி காங்கிரசுக்கு முன்னதாக பல பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டுள்ளது என்றார்.