புனித அன்னம்மாள் சிலையை மாசுப்படுத்திய ஆடவர் ஒரு மனநோயாளியாம்

புக்கிட் மெர்தாஜாம் புனித அன்னம்மாள் தேவாலயத்தில் உள்ள தெய்வச் சிலைகளை மாசுபடுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் “மன நோயாளி” என்றும் அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் செபராங் பிறை கவுன்சிலர் டேவிட் மார்ச்சல் கூறினார்.

சந்தேகப் பேர்வழியின் குடும்பத்தார் அச்சம்பவம் பற்றி முகநூலில் படித்தறிந்த பின்னர் தன்னை அணுகியதாக அவர் தெரிவித்தார்.

சந்தேகத்துக்குரிய அந்த ஆடவரின் மனைவி தன் கணவர் குறித்து நேற்றிரவு போலீசில் புகார் செய்தார் என்றாரவர். அப்புகாரில் கணவருக்கு அவசர மனநோய் சிகிச்சை தேஎவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.