நஜிப்: ரோஸ்மாவுக்குப் பிறந்த நாள் பரிசாக கடிகாரம் கொடுக்க விரும்பினேன்

எஸ்ஆர்சி வழக்கு முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், விடுமுறைக்காகக் குடும்பத்தோடு ஹவாய் சென்றிருந்ததாகவும் அப்போது மலேசியாவில் வெள்ள நெருக்கடி ஏற்பட்டு உடனே திரும்பி வர வேண்டியிருந்தது என்றும் விடுமுறைக்கிடையில் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து செல்வதற்குப் பரிகாரமாக தன் மனைவியின் பிறந்த நாள் பரிசை- ஒரு கடிகாரத்தை-த் தேர்ந்தெடுப்பதை அவரிடமே விட்டுவிட்டதாகக் கூறினார் .

கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில், சாட்சியமளித்த நஜிப், ஹானலுலுவில் அவருடைய கடன் அட்டை மூலமாக யுஎஸ்130,625 டாலர்(ரிம543,530) செலவிட்டது குறித்து விவரித்தபோது அவ்வாறு கூறினார்.

அப்பணம் எஸ்ஆர்சி இண்டர்நேசனல் சென். பெர்ஹாட்டின் பணம் என்கிறார்கள் புலனாய்வு அதிகாரிகள், நன்கொடையாகக் கிடைத்த பணம் என்கிறார் நஜிப்.