மரண தண்டனை கைதிகளுக்கு மாற்றுத் தண்டனை : ஜனவரியில் தெரிய வரும்

ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு மாற்றுத் தண்டனை கொடுப்பது பற்றி ஆராய அமைக்கப்பட்ட பணிக்குழு அடுத்த ஆண்டு ஜனவரியில் அதன் அறிக்கையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர்துறை அமைச்சர் லியு வுய் கியோங் இதனைத் தெரிவித்தார்.

இன்று கோலாலும்பூரில் அனைத்துலக மனித உரிமை நாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் லியு செய்தியாளர்களிடம் பேசினார். கட்டாய மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை அகற்ற உத்தேசிக்கப்பட்டிருப்பதால் ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான மாற்றுத் தண்டனை குறித்து பரிசீலிக்க வேண்டியுள்ளது என்றாரவர்