கட்டிக்காத்த ஒற்றுமை நொடிப்பொழுதில் கெட்டுவிடலாம்- சிலாங்கூர் சுல்தான் எச்சரிக்கை

சிலாங்கூர் சுல்தான் ஷரபுட்டின் இட்ரிஸ் ஷா, மக்களின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பது அவசியம் என்பதை வலியுறுத்தி பல்லாண்டுகளாக உருவாக்கிய ஒற்றுமையை உருக்குலைப்பது எளிது என்றும் எச்சரித்தார்.

“வலுவான ஒற்றுமையைக் கொண்ட நாட்டை உருவாக்க பல ஆண்டுகள் ஆகும். ஆனால், நாம் எச்சரிக்கையாக இல்லாமல் பகைமை பாராட்டிக் கொண்டிருந்தால் நாடு கண்ணிமைக்கும் நேரத்தில் அழிந்து போகும்”. சிலாங்கூர் சுல்தான் தம் அதிகாரப்பூர்வமான பிறந்த நாளையொட்டி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இதனைத் தெரிவித்தார்.

இன ஒற்றுமைக்கே முன்னுரிமை அளிப்பதாகக் கூறிய சிலாங்கூர் ஆட்சியாளர் மக்கள் இணக்கத்துடன் வாழ்வதைக் காண விரும்புவதாகக் குறிப்பிட்டார்.