மேவ்கோம், சிஏஏஎம் ஆகிய இரண்டும் ஒருங்கிணைக்கப்படும் – செய்தித்தளம் தகவல்

மலேசிய ஆகாயப் போக்குவரத்து ஆணையம் (மேவ்கோம்), மலேசிய சிவில் ஆகாயப் போக்குவரத்து ஆணைக்குழு(சிஏஏஎம்) ஆகிய இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்ட பின்னர் மலேசியாவில் சிவில் ஆகாயப் போக்குவரத்தை முறைப்படுத்த ஒரே ஒரு அமைப்பு மட்டுமே இருக்கப் போகிறது.

அமைச்சரவை சிஏஏஎம்-முக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்க இப்போதுள்ள இரண்டையும் ஒருங்கிணைக்க இணக்கம் தெரிவித்திருப்பதாக பல வட்டாரங்களை மேற்கோள்காட்டி த எட்ஜ் செய்தித் தளம் அறிவித்துள்ளது.

இப்போதைக்கு சிவில் ஆகாயப் போக்குவரத்தின் தொழில்நுட்பம், பராமரிப்புப் பணிகள், பாதுகாப்பு விவகாரங்கள் போன்றவற்றை சிஏஏஎம் கண்காணித்து வருகிறது. சிவில் ஆகாயப் போக்குவரத்தின் பொருளாதார, வணிக விவகாரங்களை முறைப்படுத்தும் பொறுப்பை மேவ்கோம் ஏற்றுள்ளது.

மேவ்கோம் 2016-இல் மலேசிய சிவில் ஆகாயப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் உருவான ஓர் அமைப்பு என்பதால் அதை இரத்துச் செய்ய நாடாளுமன்ற ஒப்புதல் தேவை.

பெர்னாமா