லீ லாம் தாய் , எம்சிபிஎவ்-இன் கெளரவ ஆயுள்கால உறுப்பினர்

சமூக ஆர்வலர் லீ லம் தாய் மலேசிய குற்றத் தடுப்பு அறநிறுவனத்தின் (எம்சிபிஎவ்) முதலாவது கெளரவ ஆயுள்கால உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான சான்றிதழை எம்சிபிஎவ் மூத்த உதவித் தலைவரான லீ, அந்த அறநிறுவனத்தின் தலைவரான துணைப் பிரதமர் வான் அசிசா வான் இஸ்மாயிலிடமிருந்து பெற்றார்.

நேற்று புத்ரா ஜெயாவில் துணைப் பிரதமர் அலுவலகத்தில் எம்சிபிஎவ் மன்றக் கூட்டத்துக்குப் பின்னர் லீ-க்கு விருதளிக்கும் சடங்கு நடைபெற்றது.

கடந்த 26 ஆண்டுகளாக எம்சிபிஎவ் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றி வந்துள்ளதைப் பாராட்டும் வகையில் லீ-க்கு ஆயுள்கால உறுப்பினர் விருது வழங்கப்பட்டிருக்கிறது.