சுரைடா: சம்பந்தமில்லாத என்ஜிஓ-கள் வாயைப் பொத்திக் கொண்டிருப்பதே நல்லது

பிகேஆர் சச்சரவில் சம்பந்தமில்லாத என்ஜிஓ-கள் இரு தரப்புகளையும் உசுப்பி விடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பிகேஆர் உதவித் தலைவர் சுரைடா கமருடின் வலியுறுத்தினார்.

“இது இரு தரப்பும் அமைதிகாக்கும் நேரம்”, என்றாரவர்.

சில சின்னஞ்சிறு என்ஜிஓ-கள் இருக்கின்றன. இவை கொசுக்கள் போன்றவை. கொசுக்கள் போன்றே அவ்வப்போது கடித்து தொந்திரவு செய்கின்றன என்று சுரைடா கூறினார்.

“பிரச்னை என்னவென்றே தெரியாத அந்த என்ஜிஓ-கள் அதில் சம்பந்தப்படக்கூடாது.

“நாட்டின் நலனை உத்தேசித்து அரைவேக்காட்டு என்ஜிஓ-கள் சீண்டிவிடும் செயலை நிறுத்துக் கொள்ள வேண்டும்”, என்று இன்று அம்பாங்கில் செய்தியாளர்களிடம் சுரைடா தெரிவித்தார்.

முன்னதாக Otai Reformis 1998 Otai Reformis 1998 சுரைடாவை வீடமைப்பு, ஊராட்சி அமைச்சிலிருந்து தூக்க வேண்டுமென்று கோரியிருந்தது.

சுரைடா, கட்சித் தலைவர் அன்வார் இப்ராக்கிமின் பெயரையும் கட்சியின் மற்ற தலைவர்களின் பெயரையும் களங்கப்படுத்தி விட்டதாக அது குற்றஞ்சாட்டி இருந்தது.