என்ஜிஓ: கைமாறு எதிர்பார்த்து ஏற்பாடு செய்யப்படும் ஹஜ்ஜு, உம்ரா பயணங்கள்கூட ஒரு விதத்தில் கையூட்டுத்தான்

மலாய்-முஸ்லிம்களின் ஆதரவைப் பெறுவதற்காக ஹஜ்ஜு, உம்ரா பயணங்களுக்கு ஏற்பாடு செய்வதும் ஒரு வகையில் கையூட்டு கொடுப்பதற்கு ஒப்பானதுதான் என்கிறார் ஊழல்-எதிர்ப்பு நிபுணர் ஒருவர்.

அரசியல்வாதிகளும் வணிகர்களும் எதையோ எதிர்பார்த்து இப்படிப்பட்ட பயணங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுப்பது உண்டு என மோசடிகளைக் கண்டறியும் மலேசிய ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் அக்பர் சத்தார் கூறியதாக இணையச் செய்தித்தளமான ஃபிரி மலேசியா டுடே அறிவித்துள்ளது.

“நீண்ட காலமாகவே அது நடந்து வருகிறது. எல்லாரும் அதைச் செய்திருக்கிறார்கள்.

“ மலாய்க்காரர்கள் ஹஜ்ஜு மற்றும் உம்ரா மேற்கொள்வதில் விருப்பமுள்ளவர்கள். ஊழல்வாதிகள் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதற்கு ஏற்பாடு செய்துவிட்டு கைமாறாக வேறொன்றை எதிர்பார்ப்பார்கள். குத்தகைகளை, அல்லது பணம் வர வேண்டியிருந்தால் அது துரிதமாகக் கிடைப்பதை”, என்றாரவர்.