அல்டான்துன்யா ஷரிபுவைக் கொல்லச் சொன்னது நஜிப் அப்துல் ரசாக்தான் என்று போலீஸ் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் அசிலா ஹத்ரி குற்றஞ்சாட்டியிருப்பதை நஜிப் நிராகரித்தார்.
மலேசியாகினியிடம் பேசிய முன்னாள் பிரதமர், மங்கோலிய பெண்ணான அல்டான்துன்யா கொல்லப்பட்டது 2006-இல், பத்தாண்டுகளுக்குமேல் ஆகிவிட்ட நிலையில் இத்தகவல் இப்போது வெளிவருவது ஏன் என்று வினவினார்.
இது, பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப செய்கின்ற ஒரு சூழ்ச்சியாகக்கூட இருக்கலாம் என்றவர் கூறிக்கொண்டார்.
“அது இட்டுக்கட்டப்பட்ட ஒரு கதை, நம்பிக்கை இழந்த ஒரு மனிதன் மரண தண்டனையிலிருந்து தப்பிக்க மேற்கொள்ளும் கடைசி முயற்சி”, என்று நஜிப் கூறினார்