அசிலா பிப்ரவரியில் ஒரு முக்கிய பிரமுகரைச் சந்தித்தார்- ஷாபி

காஜாங் சிறையில் மரண தன்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் போலீஸ் படையின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவு முன்னாள் அதிகாரியான அசிலா ஹத்ரி மரண தண்டனைக் கைதிகளுக்கான இடத்திலிருந்து ஒரு மிக முக்கிய பிரமுகரைச் (விவிஐபி) சந்திப்பதற்காக இவ்வாண்டு பிப்ரவரியில் வெளியில் அழைத்து வரப்பட்டாராம். வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லா கூறினார்.

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரசியல் வாழ்க்கைக் கெடுக்க ஒரு சூழ்ச்சித் திட்டமே உருவாகிக் கொண்டிருக்கிறது என அவரின் வழக்குரைஞரான ஷாபி கூறினார்..

பலர் அசிலாவைச் சந்தித்து மங்கோலியப் பெண்ணான அல்டான்துன்யா ஷரிபு கொலையில் முன்னாள் பிரதமருக்குத் தொடர்புண்டு என்று கூறுமாறு வற்புறுத்தி உள்ளனர். அவர்களில் ஒருவர் ஒரு விவிஐபி என்றாரவர்.

“அவர் யார் என்பதையோ அவர் ஓர் அரசியல்வாதியா என்பதையோ தெரிவிக்க மாட்டேன்”, என்றாரவர்.