தாய்மொழிப் பள்ளிகள் கூட்டரசு அரசமைப்புக்கு எதிரானவை என்பதால் அவற்றைச் சட்டவிரோதமானவை என்று அறிவிக்குமாறு தொடுக்கப்பட்ட்டிருக்கும் வழக்கை எண்ணி டிஏபி வருத்தம் கொள்கிறது.
“1957 மெர்டேகாவிலிருந்து கடந்த 62 ஆண்டுகளாக சீன, தமிழ்ப் பள்ளிகள் இருப்பது குறித்து யாரும் கேள்வி எழுப்பியதில்லை.
“இப்போது முதல் முறையாக, சீன, தமிழ்ப் பள்ளிகள் செயல்படுவது கூட்டரசு அரசமைப்பின் பிரிவு 152(1)-க்கு முரணானது என்று அறிவிக்க வேண்டுமென்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
“இதை ஆபத்தான முன்னெடுப்பாக டிஏபி கருதுகிறது. அது தமிழ், சீனப் பள்ளிகளின் இருப்புக்கு ஒரு மருட்டல் என்பதுடன் தேசிய ஒற்றுமைக்கும் பல்லினச் சமுதாயத்தின் இணக்கத்துக்கும்கூட அதனால் கேடு விளையலாம்”, என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
சீன, தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசமைப்பு வழங்கும் உரிமையைத் தற்காக்க டிஏபி முழுமூச்சாக போராடும் என்று கூறிய லிம், இவ்விவகாரத்தை நாளை அமைச்சரவைக் கூட்டத்துக்குக் கொண்டு செல்லப்போவதாகவும் தெரிவித்தார்.
ஒரு வழக்குரைஞரான முகம்மட் கைருல் அஸாம் அசிஸ், சீன, தமிழ்ப் பள்ளிகளில் மெண்டரின், தமிழ் மொழிகள் பயன்படுத்த இடமளிக்கும் 1996 கல்விச் சட்டம் பிரிவு 17 மற்றும் 28 கூட்டரசு அரசமைப்பு பிரிவு 152க்கு எதிரானது என்று அறிவிக்கக் கோரி வழக்கு தொடுத்துள்ளா