அசிலா 2015-இலிருந்து சிறையை விட்டு வெளியேறியதில்லை- சிறைத்துறை

மரண தண்டனைக் கைதியான அசிலா ஹத்ரி பிப்ரவரி மாதம் ‘மிக முக்கிய பிரமுகர்(விவிஐபி) ஒருவரைச் சந்திப்பதற்கு சிறையிலிருந்து வெளியில் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லா கூறுவதைச் சிறைத் துறை மறுக்கிறது.

அசிலா 2015, ஏப்ரல் 15-இல் நீதிமன்றத்துக்குச் சென்று வந்ததைத் தவிர்த்து சிறையிலிருந்து வெளிவந்ததில்லை என்று அத்துறை ஓர் அறிக்கையில் கூறியது.

அத்துறையின் பதிவுகளின்படி அவரின் குடும்பத்தினர் 34 தடவைகளும் அவரின் வழக்குரைஞர் 15 தடவைகளும் அவரைச் சென்று கண்டுள்ளனர்.

“எனவே , ஒரு விவிஐபி-யைச் சந்திப்பதற்காக அசிலா சிறைக்கு வெளியில் அழைத்து வரப்பட்டார் என்ற கூற்று உண்மை அல்ல”, என அறிக்கை மேலும் கூறிற்று.