சீனர் கல்விக்குப் போராடும் அமைப்பான டோங் ஜியாவ் ஸோங், தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி பாடம் கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஏற்பாடு செய்திருக்கும் பேரணியில் பங்குகொள்ள விரும்பும் அமைப்புகள் முன்கூட்டியே பதிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
டிசம்பர் 28-இல் காஜாங் நியு இரா கல்லூரியில் பேரணி நடைபெறவுள்ளது.
கலந்துகொள்ள எண்ணும் அமைப்புகள் டோங் ஸோக் இணையத் தளத்தில் தங்களைப் பதிந்து கொள்ளலாம் அல்லது தொலைபேசிவழி அல்லது மின்னஞ்சல் மூலமாக டோங் ஸோங்கைத் தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
“அவ்விவகாரம்மீது சீனர் சமூகத்தின் உறுதிப்பாட்டைக் காண்பிப்பதற்காகவும் பிரச்னையின்பால் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்து தீர்வு காணும் நோக்கத்துடனும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“அதே வேளை, தமிழ்க் கல்வியில் ஆர்வம் கொண்டுள்ள அமைப்புகளும் பேராளர்களை அனுப்பி வைக்கலாம். பேரணி சுமுகமாக நடந்தேற வேண்டும் அதனால், அறிவிப்பு அட்டைகள், பதாதைகள், பிரச்சார துண்டு அறிக்கைகள் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை”, என்று டோங் ஸோங் கூறிற்று.
இந்த விடயம் வைரல் ஆக்கபடவேண்டும்