நான்கு மாநிலங்களில் மூவாயிரத்துக்கும் அதிகமான வெள்ள அகதிகள்

கிளந்தான், ஜோகூர், பகாங், சாபா ஆகிய மாஅநிலங்களில் 3,000-க்கும் மேற்பட்ட வெள்ள அகதிகள் இன்னமும் தற்காலிக துயர்துடைப்பு மையங்களில் இருந்து வருகின்றனர்.

ஜோகூரிலும் பகாங்கிலும் வெள்ள நிலைமை இன்று சீரடைந்திருந்தது. கிளந்தானிலும் சாபாவிலும் அதிக மாற்றமில்லை.

கிளந்தானில்தான் அதிகமான வெள்ள அகதிகள். 705 குடும்பங்களைச் சேர்ந்த 2029 பேர் இன்னமும் துயர்துடைப்பு மையங்களில் உள்ளனர் ஜோகூரில் 810 பேர், பகாங்கில் 318 பேர், சாபாவில் 489 பேர்.

கிளந்தானில் இன்று காலை மேக மூட்டமாக இருந்தது.

ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குளுவாங், பத்து பகாட், செகாமாட் ஆகிய இடங்களில் 14 துயர்துடைப்பு மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். செகமாட்டில்தான் வெள்ள அகதிகள் எண்ணிக்கை அதிகம். அங்கு 577 பேர் 11 மையங்களில் தங்கியுள்ளனர்.

பகாங்கில் வெள்ளம் கிட்டத்தட்ட வடிந்து விட்டது. தெமர்லோவில் 2 மையங்களில் மட்டும் 318பேர் தங்கியுள்ளனர்.

சாபாவில், பியுவோர்ட்-டிலும் மெம்பகுட்-இலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் டேவான் செலாகோன் -இல் செயல்படும் துயர்துடைப்பு மையத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

பல சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.

-பெர்னாமா