அந்த நேரத்தில் அன்வார் எங்கிருந்தார் என்பதைக் கண்டறிவதில் போலீசார் தீவிரம்

பிகேஆர் தலைவர் அன்வார் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் அந்த நேரத்தில் அவர் எங்கிருந்தார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

முகம்மட் யூசுப் ராவுத்தர் தன்னுடைய சத்திய பிரமானத்தில் 2018 அக்டோபர் 2-இல், அன்வார் தனக்குப் பாலியல் தொந்திரவு கொடுத்ததாகக் குற்றஞ் சாட்டியுள்ளார். அதே நாளில் போர்ட் டிக்சன் இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்று விட்டதாக அன்வார் கூறுகின்றார்.

“ஒருவர் ‘ஏ’ என்கிறார். இன்னொருவர் ‘பி’ என்கிறார். அப்போது யார் எங்கிருந்தார்கள் என்பதைக் கண்டறிய முயல்கிறோம். அது தெரிந்தால் உண்மை தெரிந்து விடும்”, என்கிறார் இன்ஸ்பெக்டர் -ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர்.

கடந்த வாரம் புக்கிட் அமான், யூசுப்மீது பொய்யறியும் சோதனை ஒன்றை நடத்தியது.

பொய்யறியும் சோதனை போலீஸ் விசாரணைக்கு உதவும் என்பதால்தான் நடத்தப்பட்டதே தவிர அது ஓர் ஆதாரமாகப் பயன்படுத்தப்படாது என்று ஹமிட் கூறினார்.

அச்சோதனையின் முடிவு இன்னும் தெரியவில்லை என்றாரவர்.

இதனிடயே, அன்வார் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை மறுத்தார். அவரும் விசாரணைக்காக புக்கிட் அமான் சென்று வந்துள்ளார்.