பகாங், கேமரன் மலை விவசாயிகள் தோட்டங்கள் தரைமட்டமாக்கப்பட்டதற்கு மஇகா-வே காரணம் என்று குற்றஞ்சாட்டியதை மீட்டுக் கொள்ளப்போவதில்லை என்கிறார் பினாங்கு துணை முதல்வர் II பி.இராமசாமி.
“எதையும் ஆராயாமல் பேசும் மஇகா கோமாளிகள் போல் அல்லாமல் அப்பகுதி பற்றி ஆராய்ந்திருக்கிறேன். உண்மை நிலவரங்கள் எனக்குத் தெரியும்.
“மஇகா வழக்கு தொடுக்குமானால் அதை எதிர்கொள்ள நான் தயார். விவசாயிகளின் நியாயமான உரிமைகளுக்குப் போராடுவதைவிட எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறெதுவுமில்லை”, என இராமசாமி இன்று பிற்பகல் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

























