தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி எழுத்துக்கலை கற்பிக்கப்படுவது தொடர்பில் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் சீனக் கல்வி அமைப்பான டொங் ஜியாவ் சொங்குடன் ஒரு கலந்துரையாடல் நடத்துவது நல்லது என்று கோலாலும்பூர், சிலாங்கூர் சீனர் அசெம்ப்ளி மண்டபம் (கேஎல்எஸ்சிஏஎச்) கூறியது.
இன்று பிற்பகல் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய கேஎல்எஸ்சிஏஎச் மனித உரிமை குழுத் தலைவர் லியாவ் கொக் ஃபா, கலந்துரையாடுவது ஜாவி பாடம் குறித்து வெவ்வேறு தரப்பினருக்குமிடையில் நிலவும் தப்பெண்ணம் அகல உதவும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.
தேசியவகை ஆரம்பப் பள்ளிகளில் சாவி வனப்பெழுத்தை திணிக்க கூடாது. இதனை திணிப்பதால் மாணாக்கர்கள் குழம்பிப்போய் விடுவார்கள்
Ya betul