2020 புத்தாண்டு வாழ்த்துகள்!

இன்று நாம் 2019 ஐ விட்டு 2020 ஐ வரவேற்கிறோம்.

மலேசியாகினியில் உள்ள எங்கள் அனைவரிடமிருந்தும், உங்கள் அனைவருக்கும் குறிப்பாக எங்கள் வாசகர்களுக்கு, இனிய 2020 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த ஆண்டில் மலேசியாவின் பயணத்தை பகிர்ந்து கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த கடமையாக இருந்தது. ஒரு சவாலான ஆண்டாக முடிந்தாலும், சில போர்களில் வென்றும் சில மோதல்களை இழந்தாலும், நம்பிக்கை மட்டும் இன்னும் வாழ்கிறது. 2020, நமது வருங்கால சந்ததியினருக்கு ஒரு சிறந்த எதிகாலத்தை உருவாக்குவதற்கான மற்றொரு ஆண்டு என்று நம்புகிறோம்.

உங்களுக்கு மேலும் செய்திகளையும், கருத்துக்களையும் தொடர்ந்து வழங்க நாங்கள் முழு சக்தியுடன் மீண்டும் வருகிறோம்!