அமைச்சர் பதவி பறிக்கப்படுவது பற்றி முகம்மட்டின் கெதாபி கவலைப்படவில்லை

அடுத்து அமைச்சர் பதவியை இழக்கப்போவது சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சர் முகம்மட்டின் கெதாபி என்றொரு வதந்தி உலவுகிறது. ஆனால், அது குறித்து அவர் கவலை கொள்ளவில்லை.

அவருடைய அடைவுநிலை “மோசமாக உள்ளது” என்று கூறப்படுவது உண்மையா என்று செய்தியாளர்கள் வினவியதற்கு அது உண்மை அல்ல என்றார்.

“கடந்த ஆண்டில் என்னுடைய அடைவுநிலை கிட்டத்தட்ட 100 விழுக்காடு” என்றார்.

அதேவேளை அமைச்சரவையில் சிறு மாற்றம் செய்யப்போவதாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியிருப்பதால் தான் எதற்கு தயாராக இருப்பதாகவும் முகம்மட்டின் குறிப்பிட்டார்.

“எந்த அமைச்சரும் இந்த அமைச்சு என்னுடையதுதான் என்று சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்க முடியாது”, என்றாரவர்.