ராய்ட்டர்ஸ் | சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் சரக்குகள் இந்திய துறைமுகங்களில் மாட்டிக்கொண்டுள்ளன – ஆதாரங்கள்

ஆயிரக்கணக்கான டன் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் பல்வேறு இந்திய துறைமுகங்களில் தாமதப்படுத்தப்பட்டு மாட்டித் தவிக்கிறன. உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய்களை வாங்கும் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளரான மலேசியாவிலிருந்து அனைத்து செம்பனை இறக்குமதிக்கும் கட்டுப்பாடுகளை விதித்த பின்னர் இது நிகழ்ந்ததாக பல ஆதாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.

உள்நாட்டு சுத்திகரிப்பாளர்கள் தங்கள் ஆலை பயன்பாட்டு விகிதங்களை (plant utilisation rates) உயர்த்த உதவும் முயற்சியில், ஜனவரி 8ஆம் தேதி சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி செய்வதற்கான தடைகளை இந்தியா அறிவித்தது என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்த தொழில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோரும், சோப்பு முதல் இனிப்பு பண்டங்கள் வரை கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் பயன்படுத்தப்படும் காய்கறி எண்ணெயின் இறக்குமதியை நம்பியுள்ளது இந்தியா.

Refinitiv தரவுகளின்படி, இந்தோனேசியாவிலிருந்து இந்தியா ஆர்டர்களை அதிகரிக்கும் போது, உலகின் இரண்டாவது பெரிய பாமாயில் உற்பத்தியாளரும் ஏற்றுமதியாளருமான மலேசியா, புது தில்லியின் நடவடிக்கை குறித்து பகிரங்கமாக கோபத்தை வெளிகாட்டியுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியா, மலேசியாவின் மிகப்பெரிய சந்தையாக இருந்துள்ளது. இந்த ‘சண்டை’, கடந்த வெள்ளிக்கிழமை மலேசிய செம்பனையை 11 ஆண்டுகளில் முதன் முதலாக, மோசமான வாராந்திர வீழ்ச்சிக்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு (இந்திய) துறைமுகங்களில் சுமார் 30,000 டன்களுக்கு மேல் மாட்டிக்கொண்டுள்ளன. சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதியை அரசாங்கம் கட்டுப்படுத்துவதற்கு முன்பாகவே இந்த கப்பல்கள் அனைத்தும் ஏற்றப்பட்டுள்ளன,” என்று மும்பையைச் சேர்ந்த காய்கறி எண்ணெய் வியாபாரி ஒருவர் கூறினார், அவர் நிறுவனத்தின் கொள்கையை மேற்கோள் காட்டி பெயர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

“வழக்கமாக சுங்க அதிகாரிகள் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு அல்லது மாற்றத்திற்கும் முன்னதாக போக்குவரத்தில் இருக்கும் பொருட்களை இறக்குவதற்கு அனுமதிப்பார்கள். ஆனால் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் விஷயத்தில், சில குழப்பங்கள் உள்ளதாலும், அதுவே தாமதத்திற்கு வழிவகுக்கிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒரு புது தில்லியின் ஆதாரம் கூறியதாவது, “இப்படி கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் சமயத்தில், இறக்குமதியாளர்களுக்கு, வாங்கும் உரிமம் (licence) பெறவேண்டிய அவசியம் தேவைப்படும். இது மலேசியாவிலிருந்து ஏற்றுமதி செய்வதை மறுக்கவோ அல்லது தாமதப்படுத்தவோ பயன்படுத்தக்கூடிய ஒரு கருவியுமாகும்”. இந்த விஷயத்தின் உணர்திறனை சுட்டிக்காட்டி இந்நபர் பெயர் குறிப்பிட மறுத்துவிட்டார்.

மற்றொரு காய்கறி எண்ணெய் இறக்குமதியாளர், கிழக்கு இந்தியாவின் கொல்கத்தா துறைமுகத்தில் சில கப்பல்கள் சிக்கிக்கொண்டுள்ளதாகவும், இன்னும் சில மேற்கு கடற்கரையில் மாட்டிக்கொண்டுள்ளதாகவும் கூறினார்.

மேற்கு கடற்கரை மங்களூர் துறைமுகத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், ஒரு கப்பலில் இருந்து கச்சா பாமாயில் இறக்கப்பட்டதாகவும், அதே நேரத்தில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கரைக்கு அனுமதிக்கப்படவில்லை எனவும் அறியப்பட்டுள்ளது. இறக்குமதியாளர், நிலைமையின் தன்மையை மேற்கோள் காட்டி பெயர் குறிப்பிட மறுத்துவிட்டார்.

ராய்ட்டர்ஸால் கொல்கத்தா மற்றும் மங்களூரில் நடைபெற்ற சம்பவங்களில் எந்தக் கப்பல்களில் சரக்குகள் உள்ளன அல்லது வாங்குபவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

பெயர் குறிப்பிட விரும்பாத கோலாலம்பூரில் உள்ள ஒரு வட்டாரம், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இந்தோனேசியா மற்றும் மலேசியா என்று இரு நாடுகளில் இருந்தும் வந்தது என்றது.

கொல்கத்தா மற்றும் மங்களூர் துறைமுக அதிகாரிகள் கருத்து கோரும் மின்னஞ்சலுக்கு உடனடி பதிலும் அளிக்கவில்லை. – ராய்ட்டர்ஸ்