பணமோசடி குற்றச்சாட்டில் அஹ்மட் மஸ்லான் மற்றும் ஷாஹிர் சமாட் கைது!

பொந்தியான் (Pontian) நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மட் மஸ்லான் மற்றும் முன்னாள் ஜொகூர் பரு எம்.பி. ஷாஹிர் சமாட் ஆகியோர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் எதிராக கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் நாளை குற்றம் சாட்டப்படும்.

பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதி மற்றும் சட்டவிரோத செயல்களின் சட்டம் 2001, ஆகியவற்றின் கீழ் ஷாஹிர் ஒரு குற்றச்சாட்டையும், அஹ்மத் இரண்டு குற்றச்சாட்டுகளையும் முறையே எதிர்கொள்ள நேரிடும் என்று எம்.ஏ.சி.சி. இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காலை 10.10 மணிக்கு அஹ்மட் கைது செய்யப்பட்டதாகவும், ஷரீர் காலை 11.22 மணிக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் எம்.ஏ.சி.சி. தெரிவித்துள்ளது.