மலேசியா ஏர்லைன்ஸில் (MAS) முதலீடு செய்வதற்கான திட்டங்களில் ஏர் பிரான்ஸ்-கே.எல்.எம் நிறுவனm 49 சதவீதத்தையும், அதே நேரத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் 25 சதவீத பங்குகளையும் பெற திட்டமிட்டுள்ளன, என இந்த விஷயத்தை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தோனேசியாவின் மலேசியப் பிரிவான லயன் ஏர் நிறுவனம், ஏர் ஏசியா குரூப், மலிண்டோ ஏர் ஆகிய நிறுவனங்களும் ஆர்வத்தை தெரிவித்துள்ளன.
“மலேசியாவின் மையமான புவியியல் இருப்பிடத்தை அவற்றின் செயல்பாடுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள இருவரும் திட்டமிட்டுள்ளனர்” என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.
MH370 விமானம் மர்மமாக காணாமல் போனதும், கிழக்கு உக்ரைனில் MH17 விமானத்தை சுட்டு வீழ்த்தப்பட்ட துக்கம் என்ற இரண்டு துயர சம்பவங்களிலிருந்து மீள போராடிய தனது தேசிய விமான சேவைக்கு மலேசிய அரசாங்கம் ஏற்புடைய பங்குதாரரை தேடிக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.