பிளஸ் மலேசியா பெர்ஹாட் (பிளஸ்) நெடுஞ்சாலைகளுக்கான 18 சதவீத டோல் கட்டணங்களுக்கான குறைப்பு பற்றிய விவரங்களை இன்று புத்ராஜெயா கோடிட்டுக் காட்டியது.
நிதியமைச்சர் லிம் குவான் எங், இன்று ஒரு அறிக்கையில், டோல் கட்டணங்களுக்கான குறைப்பு பின்வரும் நெடுஞ்சாலைகளுக்கு பொருந்தும் என்றார்:
- North-South Expressway (NSE)
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை New Klang Valley Expressway (NKVE)
புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலை (NKVE)North-South Expressway Central Link (Elite)
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை மத்திய இணைப்புSecond Link Expressway (Linkedua)
இரண்டாவது இணைப்பு நெடுஞ்சாலைEast Coast Expressway Phase 2 (LPT)
கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை கட்டம் 2Seremban–Port Dickson Highway (SPDH)
செரம்பான் – போர்ட்டிக்சன் நெடுஞ்சாலைButterworth-Kulim Expressway (BKE)
பட்டர்வொர்த்-கூலிம் நெடுஞ்சாலைPenang Bridge
பினாங்கு பாலம்
கட்டணங்களுக்கான குறைப்பு பின்வரும் வாகன வகைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அவர் விளக்கினார்:
- Passenger vehicles (Class 1)
பயணிகள் வாகனங்கள் Taxi (Class 4)
டாக்ஸிBuses (Class 5)
பேருந்துகள்
வணிக கனரக வாகனங்களுக்கு (வகுப்பு 3 மற்றும் 4) / commercial heavy vehicles (Class 3 and 4) இக்கட்டணங்களுக்கான குறைப்பு பொருந்தாது. பினாங்கு பாலத்திற்கு மட்டுமே 2, 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு வாகனங்களுக்கு கட்டணங்களுக்கான குறைப்பு பொருந்தும்.
இந்த புதிய கட்டண குறைப்பு பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வரும்.