கொரோனா வைரஸ்: சீனாவில் உள்ள மலேசியர்களுக்கு உதவ அவசரகால குழுக்கள்

சீனாவில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மலேசியர்களுக்கு உதவ பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரகமும், பணி குழுக்களும் அவசரகால உதவி குழுக்களை அமைத்து வருகின்றன.

வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, தூதரகத்தைத் தவிர, குவாங்சோ Guangzhou, குன்மிங்/Kunming, நானிங்/Nanning, ஷாங்காய்/Shanghai, ஜியான்/Xi’an மற்றும் ஹாங்காங்கில்/Hong Kong உள்ள தூதரக குழுக்கள் மற்றும் தைபேயில் உள்ள மலேசிய நட்புறவு மற்றும் வர்த்தக மையமும் (Malaysian Friendship and Trade Centre) இதேபோன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

“ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹானை உள்ளிட்டு, மேலும் ஏழு நகரங்களில் இருந்து வெளிச்செல்லும் பயணத்தை நிறுத்துவதை சீனா நீட்டிக்கும் முடிவை வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அந்நகரங்கள், ஹுவாங்காங்/Huanggang, ஈஜோ/Ezhou, சிபி/Chibi, சியான்டாவோ/Xiantao, கியான்ஜியாங்/Qianjiang, ஜிஜியாங்/Zhijiang மற்றும் லிச்சுவான்/Lichuan ஆகும்.

“நிலைமையை கண்காணிக்க அமைச்சகம் சீனாவில் உள்ள மலேசிய தூதரக குழுக்களுடன் நெருக்கமாக தொடர்புகொண்டு வருகிறது. மேலும் வேண்டிய உதவி தேவைப்படும் மலேசியர்களுக்கு அத்தகைய உதவி சென்றடைய ஆவணம் செய்யப்படும்” என்று விஸ்மா புத்ராவின் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

“பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் மலேசியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து திரும்பிய 14 நாட்களுக்குள் மலேசியர்கள் பொது இடங்களைத் தவிர்க்கும்படியும், காய்ச்சல், இருமல் அல்லது சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும் அறிவுறுத்தப்படுவதாக அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி கோரும் மலேசியர்கள் பின்வரும் மலேசிய தூதரகம்/துணைத்தூதரகங்களை தொடர்பு கொள்ளலாம்: