அம்னோ திருந்துவதற்கு இடமில்லாத காலத்திற்குப் பொருந்தாத கட்சி

“அதன் தலைவர்களைப் பொறுத்த வரையில் அனைத்து தேசியப் பிரச்னைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் இனம், சமயம், மலாய் ஆட்சியாளர்கள் ஆகியோரைச் சார்ந்துள்ளது.”

அம்னோ ஏன் டிஏபி-யைக் கண்டு அஞ்சுகிறது

டிங்கி: நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் அம்னோபுத்ராக்கள் தங்களை மட்டுமே வளப்படுத்திக் கொண்டு வருவதை கிராமப்புற மலாய்க்காரர்கள் உணர வேண்டிய நேரம் வந்து விட்டது. கிராமப்புற மலாய்க்காரர்கள் வாழும் நிலையைப் பாருங்கள். அவர்களுடைய நிலையை அம்னோபுத்ராக்களான கோடீஸ்வரர்களுடன் ஒப்பிடுங்கள்.

நகரங்களில் வேலை செய்யும் மலாய் இளைஞர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி மாற்றத்திற்கு வாக்காளிக்குமாறு தங்கள் பெற்றோர்களை கேட்டுக் கொள்ள வேண்டும். தங்களை வளப்படுத்திக் கொள்வதற்காகவே அம்னோ தலைவர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க விரும்புகின்றனர் என்பதை கிராம மக்களுக்கு புரிய வைப்பதற்கு எல்லா ஊழல்களும் மோசடிகளும் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

இரண்டு ஆடம்பர அடுக்குமாடி வீடுகள், விலை உயர்ந்த கார் ஒன்று, புத்ராஜெயாவில் நிலம் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கு ஒர் அமைச்சர் குடும்பத்துக்கு பிஎன் அரசாங்கம் 250 மில்லியன் ரிங்கிட் கடன் கொடுக்கிறது. அதனை திருப்பிச் செலுத்துவதற்கான ஏற்பாடு இல்லை. அதன் பொருள் என்ன? அதனைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம் என்பதா?

விவசாயம் செய்வதற்கு அல்லது கால்நடை வளர்ப்பதற்கு கிராமப்புற மலாய்க்காரர்களுக்கு 100,000 ரிங்கிட் கடன் கிடைக்குமா?  எளிய நிபந்தனையுடன் கூடிய அதே மாதிரியான கடனை எல்லா மலாய் தொழில்முனைவர்களும் அரசாங்கத்திடம் கோர வேண்டும். அது கிடைக்காவிட்டால் வீழ்த்தப்படும் சாத்தியத்தை எதிர்கொள்ளுமாறு அதற்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்.

ஸ்விபெண்டர்: நாடு எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அம்னோவிடம் எந்த யோசனையும் இல்லை. எந்தத் தேர்தலிலும் வாக்குகளைப் பெறுவதற்காக மலாய்க்காரர் அல்லாதாரை அரக்கர்களாகக் காட்டுவதற்கு இனம், சமயம், அண்மைய காலமாக மலாய் ஆட்சியாளர்கள் ஆகிய விஷயங்களைத் தூண்டி விடுவதைத் தவிர வேறு எதனையும் அம்னோ தலைவர்கள் சிந்திப்பதே இல்லை.

பாஸ் கட்சியும் பிகேஆரும் மலாய் ஆதிக்கம் பெற்ற அரசியல் கட்சிகள் என்பதால் அவற்றைத் தோற்கடிக்க முடியும் என அம்னோ எண்ணுகிறது. அவை இரண்டும் அம்னோவில் இணைந்து விட்டால் எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்து விடும்  என அது கருதுகிறது.

இனம், சமயம் ஆகியவற்றுக்கு அப்பால் அம்னோ-வால் பார்க்க முடியவில்லை. சிந்திக்கவும் முடியவில்லை. அதன் தலைவர்களைப் பொறுத்த வரையில் அனைத்து தேசியப் பிரச்னைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் இனம், சமயம், மலாய் ஆட்சியாளர்கள் ஆகியோரைச் சார்ந்துள்ளது. அதனால் நாடு எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு அதன் தலைவர்கள் குறுகிய நோக்கம் கொண்ட அரை வேக்காடு தீர்வுகளை வழங்குகின்றனர்.

அம்னோ, மலாய்க்காரர்களை பல தசாப்தங்களாக மூளைச் சலவை செய்து அவர்களை அப்படி சிந்திக்குமாறு செயல்படுமாறும் செய்து விட்டதோ என்னவோ? ஆகவே அம்னோ திருந்துவதற்கு இடமில்லாத காலத்திற்குப் பொருந்தாத கட்சி.

உங்கள் அடிச்சுவட்டில்: நாட்டின் வளப்பத்தை நேர்மையுடனும் கௌரவத்துடனும் நிர்வகிக்க நல்ல யோசனைகளையும் மதிப்பைக் கூட்டக் கூடிய ஆற்றலையும் கொண்டவர்கள் இந்த நாட்டை ஆள வேண்டும் என்பதை மக்கள் என்றுதான் உணருவார்களோ?

இனத்துக்கும் சமயத்துக்கு அங்கு இடம் இருக்கக் கூடாது. இருக்கவும் கூடாது. இது என்னுடைய ஆசை. அதை விட சிறந்த மாதிரி ஏதும் உள்ளதா?

கறுப்பு மம்பா: ஆளும் அரசாங்கம் மீண்டும் இனவாத சமய அட்டையை எடுத்துக் கொண்டுள்ளது. மலேசிய அரசியலில் அம்னோ சொல்வது போல இனமும் சமயமும் பிரச்னைகளே அல்ல. ஊழல், சேவகர்களுக்கு உதவுவது, மோசடிகள் ஆகியவையே முக்கியமான விஷயங்கள்.

ரோபர்ட் லாவ்: மலாய்க்காரர்களுடைய ஆதரவைப் பெற இன அட்டையை அம்னோ முன்னெடுத்துள்ளது. அடுத்த தேர்தலில் பிஎன் ஆட்சியை இழந்தால் டிஏபி (சீனர்கள்) கட்டுக்குள் நாடு போய் விடும் எம்ற அச்சத்தைத் தோற்றுவிக்க அம்னோ முயலுகின்றது.

TAGS: