இரண்டாவது உள்ளூர் கொரோனா கிருமி தொற்று
கொரோனா வைரஸ் | சிங்கப்பூரில் உள்ள கிராண்ட் ஹையாட் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு மலேசிய நபர் கொரோனா வைரஸ் (2019-nCoV) பாதிக்கப்பட்டார். 41 வயதான அவர், தனது 65 வயதான மாமியாருக்கு வைரஸை தொற்றவைத்துள்ளார்.
முன்னதாக, அவர் தனது 40 வயது சகோதரிக்கு தொற்று ஏற்படுத்தியிருந்தார். அது பிப்ரவரி 6 ஆம் தேதி சுகாதார அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.
மற்ற எல்லா நிகழ்வுகள் மலேசியர்கள் அல்லாதவர்கள் ஆவர். அதாவது மலேசியாவிற்குள் நுழைவதற்கு அல்லது திரும்புவதற்கு முன்பு நோயாளிகள் வெளிநாட்டில் வைரஸால் பாதித்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
மலேசியாவில் இப்போது 17 பாதிப்புகள் உள்ளன. இங்கு எந்த இறப்பும் பதிவு செய்யப்படவில்லை. அதோடு, மலேசிய மருத்துவ குழுக்கள் இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் மூன்று பேரும் விரைவில் குணமடைந்து வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

























