ஏழு ஆவணங்களில் நஜிப்பின் போலி கையொப்பங்களா?

ஏழு ஆவணங்களில் நஜிப்பின் போலி கையொப்பங்களா?

ஒரு மாதத்திற்கும் மேலாக SRC International / எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் எதிரான நஜிப் ரசாக் ஊழல் வழக்கு தொடர்பாக, முன்னாள் பிரதமரின் கையொப்பம் இருப்பதாகக் கூறப்படும் பல முக்கியமான ஆவணங்களில் இப்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், ஆவணத்தில் கையொப்பத்தின் செல்லுபடி குறித்து நஜிப் கேள்வி எழுப்பினார். இது நஜிப்பின் கையொப்பம் தான் என்று உறுதிப்படுத்த உதவ, நிபுணர் சாட்சிகளைக் அழக்குமாறு வக்கீல்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி இதற்கு அனுமதித்துள்ளார்.

இந்த சர்ச்சை ஏழு ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டது. நீதிமன்றத்தில், நஜிப் அந்த ஆவணங்களை சந்தேகிப்பதாகவும், அவரது கையொப்பம் போலியானதாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் கூறினார். இதனால், ஆஸ்திரேலிய கையொப்ப நிபுணரால் கையொப்ப பரிசோதனை செய்ய வக்கில்கள் விண்ணப்பித்துள்ளனர்.