முன்னாள் பினாங்கு மாநில பிரதிநிதிக்கு எதிராக ஜாகிர் நாயக் அவதூறு வழக்கு தொடர்ந்தார்
கடந்த ஆண்டு அக்டோபரில் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றிய ஐந்து இடுகைகள் தொடர்பாக முன்னாள் பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ரவீந்தரன் மீது முஸ்லீம் போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார்.
ஜாகிர், கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி சட்ட நிறுவனமான மெஸ்ஸர்ஸ் அக்பெர்டின் அண்ட் கோ (Messrs Akberdin & Co) மூலம், கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் அச்சம்மனை அனுப்பினார்.
பி.கே.ஆர் உறுப்பினர் ரவீந்தரன் அக்டோபர் 13 முதல் 17 வரை ஐந்து முகநூல் (FB) இடுகைகளை பதிவேற்றியதாக கூறப்படுகிறது.
அந்த ஐந்து முகநூல் இடுகைகள், தீமை, வெறுப்பு, பொறாமை மற்றும் / அல்லது குற்றச்சாட்டுகளின் உண்மையை அவரிடமிருந்து விளக்கம் கேட்காமலேயே பதிவு செய்ததாக ஜாகிர் கூறினார்.
பதிவேற்றிய ஐந்து பதிவுகளின் மூலம், ஜாகிர் ஒரு மோசமான தன்மை கொண்டவர் என்றும் மலேசியாவின் தேசிய பாதுகாப்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு அவர் ஒரு அச்சுறுத்தல் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜாகிர் குற்றம் சாட்டினார்.
அந்த ஐந்து கூற்றுகளும் ஆதாரமற்றவை, பொய்யானவை, புனைகதைகள், போலித்தனமானவை, முற்றிலும் கற்பனையானவை, மற்றும் / அல்லது ரவீந்தரனின் ஆசைபடி திரிக்கப்பட்டவை என்று ஜாகிர் கூறினார்.
சம்மனில் கூறியது: “வெளியிடப்பட்ட அல்லது மறுபிரசுரம் செய்யப்பட்ட அவதூறு பதிவுகள் கிழ்கண்ட நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளன என்றும் ஜாகீர் கூறியுள்ளார்:
(அ) பொது வெறுப்பை தூண்டுதல், தவறான நோக்கமுடையவை மற்றும் / அல்லது அவமதிப்பு உண்டாக்குதல்; (Inciting public hatred, ill-will and/or contempt towards the plaintiff;)
(ஆ) மலிவான விளம்பரம் தேடுதலுக்கும், சுயநன்மைக்கும் மற்றும் / அல்லது பாராட்டு பெறுவதற்கும் (Achieving cheap publicity, mileage and/or adulation for the defendant);
(இ) உடல், மன, உணர்ச்சி மற்றும் / அல்லது உளவியல் தீங்குகளுக்கு ஆளாக்குதல்
(Exposing the plaintiff to physical, mental, emotional and/or psychological harm)
“அந்த அவதூறான பதிவுகளை வெளியிடுவதன் மூலம், பொதுவாக மலேசியர்களிடையே மத அல்லது இன உணர்வுகளைத் தூண்டிவிட்டார்” என்று ஜாகிர் கூறினார்.
“பிரதிவாதி, வாதிக்கு எதிரான தவறான நோக்கங்களைக் கொண்டிருந்தார் என்பது நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. புகழ்பெற்ற முஸ்லீம் மத ஆளுமை வாதிக்கு அவதூறு செய்வதன் மூலம் சமுதாய நல்லிணக்கத்தை சீர்குலைக்க பிரதிவாதி முட்பட்டுள்ளார் என்பதும் தெளிவாகிறது”, என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 1 தேதியிட்ட, கோரிக்கைக் கடிதத்தை ரவீந்தரனுக்கு தனது வழக்கறிஞர்கள் அனுப்பியதாக ஜாகிர் கூறினார். அவதூறான அறிக்கைகளைத் திரும்பப் பெறக் கோரி, மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மற்றும் / அல்லது நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் என்றும் ஜாகிர் கோரியுள்ளார்.
எவ்வாறாயினும், பிரதிவாதி அந்த கோரிக்கைகளை மறுத்துவிட்டார், புறக்கணிக்கப்பட்டார் ஏற்கத் தவறிவிட்டார் என்று வாதி கூறினார்.
தீர்ப்பை அறிவித்த ஏழு நாட்களுக்குள் (தீர்ப்பு ஜாகீருக்கு ஆதரவாக இருந்தால்) ஐந்து அவதூறு பதவிகளையும் இணையத்திலிருந்து நீக்க ரவீந்தரனை கட்டாயப்படுத்த ஜாகீர் கட்டாய தடை உத்தரவை கோருகிறார்.
எந்தவொரு ஊடகத்திலும் எந்தவொரு அவதூறு அறிக்கையையும் வெளியிடுவதிலிருந்து, விநியோகிப்பதில், மற்றும் / அல்லது பதிவேற்றுவதிலிருந்து பிரதிவாதியைத் தடுக்க ஒரு நிரந்தர தடை உத்தரவை ஜாகிர் கோருகிறார்.
ஆங்கில நாளேடான தி ஸ்டார், மலாய் செய்தித்தாள்கள் பெரித்தா ஹரியான் மற்றும் சினார் ஹரியான், பிற நாளிதழ்களான தமிழ் நேசன் மற்றும் சின் செவ் டெய்லி, ஆன்லைன் செய்தியான ப்ரீ மலேசியா டுடே, மற்றும் ரவீந்திரனின் முகநூல் பக்கம் ஆகியவற்றில் மன்னிப்பு அறிக்கை விடுமாறு ஜாகிர் கோருகிறார். அதைத் தவிர பல வித நஷ்ட ஈடுகளையும் கோருகிறார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டில், மனிதவளத்துறை அமைச்சர் எம்.குலசேகரன், கிள்ளான் எம்.பி. சார்லஸ் சாண்டியாகோ, சதீஸ் மற்றும் முன்னாள் தூதர் டென்னிஸ் ஜே இக்னேஷியஸ் போன்ற குறிப்பிடத்தக்க அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக ஜாகிர் பல கோரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் தொடக்கத்தில் கிளந்தானில் தனது உரையின் போது மலேசிய சீன மற்றும் இந்திய சமூகம் குறித்து ஜாகிர் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கைகள் தொடர்பாக இந்த சட்ட நோட்டிசுகள் இருந்தன.
ஜாகிர் ராமசாமிக்கு எதிராக இரண்டு அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.
குலசேகரன், ராமசாமி, சாண்டியாகோ, சதீஸ், மற்றும் இக்னேஷியஸ் ஆகியோருக்கு எதிராக ஜாகிர் தொடர்புடைய போலீஸ் புகார்களையும் பதிவு செய்ததாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி மலேசியாகினி செய்தி வெளியிட்டது.