மலேசியாவின் பொருளாதாரம் 2020-ல் 4.5 விழுக்காடு வளர்ச்சியடையும் – பிரதமர்

மலேசியாவின் பொருளாதாரம் 2020-ல் 4.5 விழுக்காடு வளர்ச்சியடையும் – பிரதமர்

மலேசியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு 4.5 சதவீதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று தெரிவித்தார். இது அரசாங்கத்தின் ஆரம்ப மதிப்பீடான 4.8 சதவீதத்திலிருந்து குறைந்துள்ளது.

நவம்பரில் 2020 வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டபோது அறிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் மதிப்பீட்டிலிருந்து குறைந்துள்ளதற்கான காரணமாக இது ஒரு “சவாலான நேரம்” என்று பிரதமர் மேற்கோள் காட்டினார்.

மலேசியாவின் நிதி அமைச்சு, தற்போது நடைபெற்று வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்க ஒரு ஊக்கத் திட்டத்தை அறிவிரைத்துள்ளது.நிதியமைச்சர் லிம் குவான் எங் வெள்ளிக்கிழமை தனது அமைச்சு மற்ற அமைச்சகங்களிடமிருந்து கருத்துக்களைக் கோருவதாகவும், விரைவில் அந்த ஊக்கத் திட்டத்தை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.