கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்க ஊக்கத் திட்டம்

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்க ஊக்கத் திட்டம்

வேகமாக பரவி வரும் கொரோனா கிருமியைத் தொடர்ந்து வரும் சவால்களால் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பொருளாதார ஊக்கத் திட்டத்தை தொடங்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

கொரோனா கிருமி பாதிப்பால் மிகவும் பாதிக்கப்படுவது சுற்றுலாத் துறையாகும் என்று அவர் கூறினார். இதனால், “விசிட் மலேசியா 2020”/“மலேசியாவுக்கு வருகை புரியுங்கள் 2020” பிரச்சாரம் நேரடி பாதிப்பைக் கண்டுள்ளது.

எவ்வாறாயினும், பொருளாதாரத்தில் இந்த எதிர்ப்பாராத பாதிப்பின் தாக்கத்தை தணிக்கும் திட்டம் அரசாங்கத்திற்கு உள்ளது என்று பிரதமர் வலியுறுத்தினார்.

“நாங்கள் “விசிட் மலேசியா 2020” பிரச்சாரத்தை அறிவித்தபோது, கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்போது, சீனாவின் பல பகுதிகளுக்கு விமானங்களை நாங்கள் நிறுத்த வேண்டிய கட்டாயம்,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் உள்ள பிரெஞ்சு நிறுவனங்களுடனான கேள்வி பதில் அமர்வில் கூறினார்.

சீன சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா சந்தையில் பெரும் பகுதியைக் கொண்டுள்ளனர். கிருமி பாதிப்பால் அவர்கள் இல்லாதது சுற்றுலாத்துறையை பாதித்துள்ளது. மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் ஏசியா உள்ளிட்ட உலகளாவிய விமான நிறுவனங்கள் கொரோனா வைரஸின் வளர்ந்து வரும் அச்சங்களுக்கு மத்தியில் சீனாவுக்கு செல்வதையும் அங்கிருந்து வருவதையும் பல விமானங்களை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இன்றுவரை, இந்த கிருமி 900-க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றுள்ளது, உலகளவில் 40,000-க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், மலேசியா ஏர்லைன்ஸ் விவகாரம் குறித்து, கடனில் மூழ்கிய விமான நிருவனத்தை யார் கைப்பற்றுவது என்பது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று மகாதீர் கூறினார்.

ஊடக அறிக்கையின்படி, பல விமான நிறுவனங்கள் மலேசியா ஏர்லைன்ஸை கையகப்படுத்த தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.