சாங்கியில் இரண்டு மலேசிய மரணதண்டனை கைதிகள் சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரல் மீது வழக்குத் தொடர்கின்றனர்

சிங்கப்பூரின் சாங்கி சிறையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு மலேசியர்கள், சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். தங்களது சட்ட ஆலோசகருக்கு எதிராக கூறப்படும் அச்சுறுத்தல், நியாயமான வழக்கு விசாரணைக்கான உரிமையை மீறுவதாக அறிவிக்கக் கோரியுள்ளனர்.

சாங்கி சிறையில் மிருகத்தனமான மற்றும் சட்டவிரோதமாக தூக்கிலிடும் முறைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் விசாரணைகள் நிலுவையில் உள்ளதால், மரணதண்டனை கைதிகளான கோபி ஆவடியன் மற்றும் தட்சினாமூர்த்தி காத்தையா ஆகியோரும் தங்களுக்கு மரணதண்டனை விதிக்க தடை உத்தரவு கோரியுள்ளனர்.

பிப்ரவரி 4 ஆம் தேதியன்று, சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரலின் சேம்பர்ஸ் (ஏஜிசி) பிரதிநிதிகள், விசாரணையின் போது தனது மற்றும் கோபியின் வழக்கறிஞர் எம். ரவிக்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படுகிறது.

எனவே, சிங்கப்பூர் அரசியலமைப்பில் ஒரு நியாயமான விசாரணை மற்றும் சுயாதீனமான சட்ட ஆலோசகருக்கான அவர்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாததாக தச்சினாமூர்த்தி தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

முன்னதாக, சாங்கி சிறையில், கைதிகளின் கழுத்தை உதைத்து உடைப்பது உட்பட, மிருகத்தனமான மற்றும் சட்டவிரோதமான தூக்கு முறைகள் அமல்படுத்தப்பட்டதாக Lawyers For Liberty (LFL) கூறியது. சிங்கப்பூர் அரசாங்கம் LFL-இன் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளாது.