சீனாவில் கொரோனா கிருமியால் இறப்புகள் 1,000 எட்டியுள்ளன

பெய்ஜிங் (பிப்ரவரி 11): கொரோனா கிருமியால் சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,000க்கு மேல் உயர்ந்தது. உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவுக்கு வெளியே நோய் பரவுவது “ஒரு பெரிய நெருப்பாக மாறும் தீப்பொறி” ஆக இருக்கக்கூடும் என்று எச்சரித்ததுள்ளது.

பாதிப்பின் மையமான ஹூபே மாகாணம் திங்களன்று 103 இறப்புகளைப் பதிவு செய்தது. ஞாயிற்றுக்கிழமை 91 இறப்புகளுக்குப் பிறகு இது ஒரு நாளில் ஏற்பட்ட மரண விழுக்காட்டில் மிக அதிகம் உள்ளது. ஆனால், முந்தைய நாளில் 2,618 ஆக இருந்த பாதிப்புக்களை விட, திங்களன்றுபுதிய பாதிப்புகள் 2,097-ஆக குறைந்துள்ளன.

பாதிப்புகள் வீழ்ச்சியடைவது இது முதல் முறை அல்ல. பிப்ரவரி 7 ஆம் தேதி ஹூபே 2,841 பாதிப்புகளை பதிவுசெய்து, அடுத்த நாளில் 2,147 பாதிப்புகள் மட்டும் பதிவாகியிருந்தன.

சீனாவில் இப்போது 42,000க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. WHO மற்றும் சீன சுகாதார அதிகாரிகள் கூற்றுப்படி, மற்ற 24 நாடுகளில் 319 பாதிப்புகள் உள்ளன.

ஜப்பானிய துறைமுகமான யோகோகாமாவில் 3,700 பயணிகள் மற்றும் குழுவினருடன் The Diamond Princess சொகுசு பயணக் கப்பல் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. இதில், மேலும் 65 பாதிப்புகள் கண்டறியப்பட்டன. மொத்த உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 135ஆக இருக்கிறது.

விஞ்ஞானிகள் சோதனைகள் மற்றும் சிகிச்சைகளை உருவாக்க போராடுகின்றனர். உலகளவில் 168 ஆய்வகங்கள் வைரஸைக் கண்டறிய சரியான தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன என்று WHO கூறுகிறது. நிறுவனங்கள் தாங்கள் உருவாக்கிய நோயறிதல் சோதனைகளை சரிபார்க்க தேவையான மருத்துவ வைரஸ் மாதிரிகளைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டு வருகின்றன.

இந்த பாதிப்பு குறித்து விசாரிக்க சர்வதேச WHO நிபுணர்களின் குழு முன்கூட்டியே சீனா வந்து சேர்ந்தது. அதன் இறப்பு எண்ணிக்கை இப்போது 2002/2003-இல் உலகளவில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்ற கடுமையான சுவாச நோய்க்குறி SARS-ஐ விட அதிகமாக உள்ளது.

Reuters
February 11, 2020