பீதியில் சிங்கப்பூர் மக்கள்

புத்ராஜெயா: உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு/The Domestic Trade and Consumer Affairs Ministry (KPDNHEP), ஜோகூர் மாநிலத்தில் சிங்கப்பூரர்களால் அத்தியாவசிய உணவு மற்றும் வீட்டுப் பொருட்களை வாங்குவதில் பீதி ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக சனிக்கிழமை (பிப்ரவரி 8) முதல் ஜோகூரில் கண்காணிப்பு நடவடிக்கையை நடத்தி வருகிறது.

கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள், உணவு மற்றும் பிற அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் மலேசியர்களுக்கு போதுமானதாக இருப்பதை உறுதி செய்வதற்காக ஜோகூர் பாரு, இஸ்கன்டார் புத்ரி, பசீர் கூடாங் மற்றும் கூலாய் ஆகிய இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சு திங்கள்கிழமை (பிப்ரவரி 10) வெளியிட்டுள்ளது.

இரண்டு நாள் நடவடிக்கையில் 60 அமலாக்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 604 வளாகங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

“சர்க்கரை, சமையல் எண்ணெய் மற்றும் மாவு போன்ற கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் ஜோகூரில் உள்ள மக்களுக்கு போதுமானதாக இருக்கின்றன என்று மொத்த விற்பனையாளர்களிடமிருந்து அமைச்சு தகவல்கள் பெற்றது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சில்லறை விற்பனையாளர்களிடையே கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை மறைத்து வைக்கவில்லை என்பதையும், விற்பனை விலைகள் அரசாங்கம் நிர்ணயித்த விலைகளுக்கு ஏற்ப இருப்பதையும் உறுதி செய்வதற்காக கண்காணிப்பு நடத்தப்பட்டது.

அந்த அறிக்கையின்படி, சிங்கப்பூரில் மக்கள் கொரோனா வைரஸ் பீதியின் அடிப்படையில் பொருள்களை வாங்குவதைக் காட்டும் வீடியோ பதிவைத் தொடர்ந்து இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. சிங்கப்பூர், கொரோனா வைரஸிற்கான அதன் நோய் பாதிப்பு எச்சரிக்கை நிலையை உயர்த்துயுள்ளதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது என தெரிகிறது.

Bernama
February 11, 2020