மலாய் வாக்குகளைக் கவரும் பொருட்டு மலேசியப் பிரச்னைகள் ஒதுக்கப்பட்டு விட்டன

“கல்வி, பொருளாதாரம், வாழ்க்கைச் செலவுகள் கூடியிருப்பது, உலக அளவில் போட்டி அதிகரித்துள்ள வேளையில் நாட்டின் எதிர்காலம் ஆகியவற்றை அம்னோ பேராளர்கள் விவாதிப்பர் என நாகரீகமான ஒவ்வொரு மலாய்க்காரரும் சரியான சிந்தனை கொண்ட ஒவ்வொரு மலேசியரும் எதிர்பார்த்தனர்.”

அம்னோ: அளவற்ற மகிழ்ச்சியிலிருந்து கசப்பான உண்மை நிலைக்கு

ஹெர்மன்கெய்ன்: அம்னோ தலைவர்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்க எண்ணியிருந்தவர்களுடைய மனநிலையை மாற்றுவதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பை இழந்து விட்டார்கள்.

நாட்டின் நடப்புப் பிரச்னைகளான கல்வி, பொருளாதாரம், வாழ்க்கைச் செலவுகள் கூடியிருப்பது, உலக அளவில் போட்டி அதிகரித்துள்ள வேளையில் நாட்டின் எதிர்காலம் ஆகியவற்றை அம்னோ பேராளர்கள் குறிப்பாக அம்னோ மூத்த தலைவர்கள் விவாதிப்பர் என நாகரீகமான ஒவ்வொரு மலாய்க்காரரும் சரியான சிந்தனை கொண்ட ஒவ்வொரு மலேசியரும் எதிர்பார்த்தனர்.

அந்த விஷயங்கள் சிறிதளவும் கூட பேசப்படவே இல்லை. மாறாக இனவாதப் பேச்சுக்களே அதிகமாக இருந்தன. டிஏபி/பிகேஆர்/பாஸ் ஆகிய கட்சிகள் மீது கூடின பட்சம் தாக்குதல் தொடுக்கப்பட்டது. ஒருவரைத் தாழ்வாக விமர்சனம் செய்வது போன்ற குப்பைகளும் நிறைந்திருந்தன.

நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து 53 ஆண்டுகள் முடிந்து விட்டன. என்றாலும் அதே மலாய் மேலாண்மை வாதம் தொடர்ந்தது. இனப் பிரிவினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

நமது உண்மையான போட்டியாளர்கள் மற்ற நாடுகளே தவிர இந்த நாட்டில் உள்ள சீனர்களோ இந்தியர்களோ அல்ல என்பதை அவர்கள் உணரத் தவறி விட்டனர். நமது வாழ் நாளில் அது நிகழும் என நான் நம்பவில்லை. இறைவன் இந்த நாட்டைக் காப்பாற்றட்டும்!

டிட்டான்: மலேசிய அரசியலில் இணையம் ஆட்டக்களத்தை சமமாக்கி விட்டது. நலிந்தவர்களிடமிருந்து தாங்கள் விரும்பியதை வலிமையானவர்கள் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

நாம் நமது தலைவர்களைத் தேர்வு செய்யும் போது நம்மை கட்டாயப்படுத்தி வழி நடத்தும் யாரையும் நாம் தேர்வு செய்யக் கூடாது.

ஷாரிஸாட் அப்துல் ஜலில் போராடுவதற்கு தயாராக இருக்கலாம். ஆனால் ஊழல் செய்துள்ளார் எனவே மக்கள் எண்ணுகின்றனர்.

அம்னோ பொதுப் பேரவை நிறைவு விழாவில் அன்வார் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார். தாம் வெற்றி பெறும் வேட்பாளர் என மசீச-வின் டாக்டர் சுவா சொய் லெக்-கை எப்படி பிஎன் நியாயப்படுத்தப் போகிறது?

சுவா-நிறுத்தினால் செக்ஸ் சிடி-க்கள் மலேசியாவுக்கு சிவப்பு சாயத்தைப் பூசி விடும். பிஎன் எதிர்காலத்தில் நம்பிக்கையைப் பெற வேண்டுமானால் நஜிப் உறுதியாக இருக்க வேண்டும்.

ஒரே மலேசியா சீனா: அம்னோ முழுக்க முழுக்க அழுகிப் போய் விட்டது. அம்னோவையும் அதன் பிஎன் கூட்டாளிகளையும் நீக்குவது தான் மலேசியாவைக் காப்பாற்றுவதற்கு உள்ள ஒரே வழி.

நாம் தைவான் மாதிரியை பின்பற்றுவோம். குவோமின்தாங் அந்த நாட்டை 50 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்தது. அது முழுக்க முழுக்க ஊழல் நிறைந்தது.

பின்னர் ஜனநாயகக் கட்சியிம் சென் ஷு பியான் பொறுப்பேற்றார். சென் -னும் ஊழல்வாதி ஆனார். அடுத்து தைவான் மக்கள் மீண்டும் குவோமின்தாங்-கை கொண்டு வந்தனர்.

வரும் 13வது பொதுத் தேர்தலில் பிஎன் னைத் தூக்கி எறிவோம். பக்காத்தானைக் கொண்டு வருவோம். பக்காத்தான் ஊழலாக மாறினால் அதனை 14வது தேர்தலில் நீக்கி விடுவோம்.

ஏபி சுலைமான்: வாக்காளர் பட்டியல் தூய்மை செய்யப்படாமல், தேர்தல் தொகுதி எல்லைகளில் தில்லுமுல்லு நிகழும் வரையில் அம்னோவும் பிஎன்- னும் வெற்றி பெறுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

அந்த இரு அம்சங்களும் நமக்கு மனத் திருப்தி தரும் வகையில் தீர்க்கப்படாத வரையில் 13வது பொதுத் தேர்தல் நிகழ்வதை எல்லா வழிகளிலும் தடுக்க நாம் முயல வேண்டும்.

உங்கள் அடிச்சுவட்டில்: அந்த ஐந்து நாள் கூட்டத்தில் பொதுவான கருத்து ஒன்று உருவானது. கட்சியையும் அதன் வேட்பாளர்களையும் கீழறுப்புச் செய்ய வேண்டாம் என்பது தான் அது.

நீங்கள் ஏன் அவ்வாறு நினைக்கின்றீர்கள்? ஒருவர் கட்சிக்கும் நாட்டுக்கும் சேவை செய்ய வேண்டுமானால் கட்சியையும் அதன் வேட்பாளர்களையும் நாம் கீழறுப்புச் செய்ய வேண்டுமா?

சேவை செய்வதற்கு நாம் இவ்வளவு கடுமையாகப் போராட வேண்டுமா?  அது சரியானதாகத் தெரிகிறதா ? அப்புறம் ஏன் சதி குறித்துப் பேசுகின்றீர்கள்? நிறைய தானியங்கள் நிறைந்த ரயிலில் ஏறி பயணம் செய்வதற்குத்தானே?

TAGS: