முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், MH370 சம்பவம் ஒரு வெகுஜனக் கொலை-தற்கொலை சதி என்று மலேசிய அரசாங்கத்தின் “மிக உயர்ந்த மட்டத்திலிருப்பவர்கள்” “ஆரம்பத்திலிருந்தே” நம்பினர் என வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று இரவு ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்பப்படவுள்ள “எம்.எச்.370: தி அன்டோல்ட் ஸ்டோரி”/”MH370: The Untold Story” என்ற ஆவணப்படத்தில், சம்பவத்தின் ஒரு வாரத்திற்குள், அவ்விமானம் நிச்சயமாக விமானியால் வேண்டுமென்றே வீழ்த்தப்பட்டதாக தனக்கு “தெள்ளத் தெளிவான தெளிவுபடுத்தப்பட்டது” என்று அபோட் கூறினார்.
இந்த விமானத்தை மலேசிய கேப்டன் ஜஹாரி அஹ்மத் ஷா (Zaharie Ahmad Shah) செலுத்தியுள்ளார்.
“எனது புரிதல் – எனது மிகத் தெளிவான புரிதல் – மலேசிய அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டங்களிலிருப்பவர்களுக்கு, மிக ஆரம்பத்திலிருந்தே, இது விமானியின்
வெகுஜனக் கொலை- தற்கொலை செயல் என்று அவர்கள் நினைத்தார்கள்” என்று அபோட் கூறினார். மார்ச் 8, 2014 அன்று காணாமல் போன விமானத்தின் போது அபோட் ஆஸ்திரேலிய பிரதமராக இருந்தார்.
“யார், யாருக்கு என்ன சொன்னார்கள் என்று நான் சொல்லப்போவதில்லை. ஆனால் நான் மீண்டும் வலியுறுத்த விரும்புவது, முற்றிலும் தெளிவாக சொல்ல விரும்புவது – இந்த சம்பவம் முற்றிலும் பைலட்டால் நிகழ்த்தப்பட்ட கொலை-தற்கொலை செயல் என்று மலேசிய அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் புரிந்து கொள்ளப்பட்டது என்பதே ஆகும்”.
“பைலட் பெரியளவில் வெகுஜனக் கொலை மற்றும் தற்கொலை செய்துள்ளார்” என்று அபோட் ஒரு அதிர்ச்சியூட்டும் கூற்றில் கூறினார்.
கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் ராடார் திரையில் இருந்து மறைந்துபோன போயிங் 777 பயணிகள் ஜெட்லைனர் காணாமல் போனது, விமான வல்லுநர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள மக்களை தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
மூன்று மாதங்களுக்கும் மேலாக தேடல் முயற்சியில் செயல்பட்டு, 112,000 கிமீ2 கீழ் கடல் தளத்தை தேடிய பின்னர், விமானத்தை கண்டுபிடிப்பதற்கான கடைசி தேடல் நடவடிக்கைகள் மே 2018 இல் நிருத்தப்பட்டன.
ஜூலை 2018இல், MH370 பாதுகாப்பு விசாரணைக் குழு, தனது 449 பக்க அறிக்கையில், விமானம் காணாமல் போனதற்கான உண்மையான காரணத்தை அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை என்று முடிவு செய்தது. ஆனால் மூன்றாம் நபரின் “சட்டவிரோத குறுக்கீடு” (“unlawful interference” by a third party) இந்த சம்பவத்தை ஏற்படுத்தியது என்ற சாத்தியத்தை அவர்கள் நிராகரிக்கவில்லை.
“குட் நைட். மலேசிய மூன்று ஏழு பூஜ்ஜியம்” (“Good night. Malaysian three-seven-zero,”) என்பது அதிகாலை 1:21 மணிக்கு விமானம் ராடாரில் இருந்து மறைவதற்கு முன்பு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு தளத்திற்கு கூறிய கேப்டனின் கடைசி வார்த்தைகள் ஆகும்.
செயற்கைக்கோள் தகவல்கள் விமானம் பின்னர் திசைதிருப்பப்படுவதைக் காட்டியது. மலாக்கா நீரணையின் மீது தொடர்ச்சியான திட்டமிடப்படாத திருப்பங்களை ஏற்படுத்தியப் பின்னர் தெற்கு இந்தியப் பெருங்கடலை நோக்கி விமானம் சென்றுள்ளது.