இரண்டு சட்ட வல்லுநர்கள் மாஸ்லீ மீது சீற்றம்

இரண்டு சட்ட வல்லுநர்கள் மாஸ்லீ மீது சீற்றமடைந்துள்ளனர்.

செயலிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) ஆதரித்ததாகக் கூறப்படும் 12 பேர் மீதான குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற அட்டர்னி ஜெனரல் டாமி தாமஸ் எடுத்த முடிவை விமர்சித்ததற்காக முன்னாள் கல்வி மந்திரி மஸ்லீ மாலிக் மீது இரண்டு சட்ட வல்லுநர்கள் சீற்றமடைந்துள்ளனர்.

மாஸ்லீயின் அறிக்கையை மறு ட்வீட் செய்து, “இது ஒரு ‘குப்பை’, உண்மையாகவே”/”This is rubbish, seriously,” என்று அம்பிகா ஸ்ரீனேவசன் ட்விட்டரில் எழுதினார்.

“பயங்கரவாதத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை. LTTE பட்டியலில் இருப்பதால் மட்டும் வழக்கு தானாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தமல்ல. அவை இரண்டு தனித்தனி விஷயங்கள்” என்று மனித உரிமை வழக்கறிஞரான அம்பிகா கூறினார்.

இதேபோல், மற்றொரு சட்ட வல்லுநர்கள் ஜைத் இப்ராஹிமும் கருத்து தெரிவித்துள்ளார். “மாஸ்லீ, அட்டர்னி ஜெனரலின் பங்கு மற்றும் உள்துறை அமைச்சரின் பங்கு குறித்து “குழப்பமடைந்துள்ளார்”” என்று பிரதம மந்திரி சட்ட விவகாரங்கள் மற்றும் நீதி சீர்திருத்தங்களுக்கான முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராஹிம் கூறினார்.

“அமைச்சர் விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடலாம், ஆனால் நீதிமன்றத்தில் யாரையாவது குற்றஞ்சாட்டும் பிரச்சினையில், போதுமான ஆதாரங்கள் இருக்கிறதா என்று தீர்மானிப்பது ஏ.ஜி. மட்டுமே” என்றார்.
“நம் சொந்த ஏ.ஜி.க்கு மரியாதை கொடுக்க முடியாதா? ஜைட் தன் ட்விட்டரில் கேட்டார்.

“உங்கள் ஏ.ஜி.க்கு ஒரு சந்தேகத்தின் பலனை (benefit of a doubt) ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள். குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு மட்டுமே கொடுக்கிறீர்கள். உங்கள் ஏஜிக்கு அவரது திறமை மற்றும் தீர்ப்பு குறித்து எந்த சந்தேகமும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறீர்கள். அப்படி இருந்தால், நீங்கள் உடனே அவரை மாற்ற வேண்டும் என நினைக்கிறீர்கள்.”

நேற்று மாஸ்லீ ஒரு அறிக்கையில், தாமஸ் வழக்குகளைத் திரும்பப் பெறுவது தவறு என்றும், LTTE ஒரு பயங்கரவாதக் குழு என்ற அரசாங்கத்தின் சட்டத்தை அவர் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.

தாமஸ் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என்று மாஸ்லீ கூறினார்.
LTTE ஒரு பயங்கரவாதக் குழுவாக அரசாங்கத்தால் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறப்படுவதால், 12 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமானவை அல்ல என்று தாமஸ் விளக்கினார்.

Section 66B(9) of the Anti-Money Laundering and Anti-Terrorism Financing and Proceeds of Unlawful Activities Act (Amla) இல் உள்ள பயங்கரவாதக் குழுக்களுக்கான (ஆறு மாதங்கள்) மறுஆய்வு குறித்தும் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்ரீ இலங்காவில் உள்நாட்டுப் போரில் தோல்வியடைந்த பின்னர் 2009ல் புலிகள் இயக்கம் செயலிழந்தது.