முகிதீன் – மகாதீர், பகிரங்க மோதல்

முகிதீன் இப்போது டாக்டர் மகாதீருடன் வெளிப்படையான போரில் இருக்கிறார்.

பெர்சத்து தலைவர் முகிதீன் யாசின் இப்போது டாக்டர் மகாதீர் முகமதுவுடன் பகிரங்க மோதலில் ஈடுபட்டுள்ளார். மகாதீர் இனி பெர்சத்து செயல் தலைவர் இல்லை என்று முகிதீன் கூறியுள்ளார்.

மகாதீர் திங்களன்று பெர்சத்து செயல் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் முகிதீன் தலைமையிலான ஒரு கட்சிக்கூட்டம் அதே இரவில் நடத்தப்பட்டது. அதில் மகாதீரின் ராஜினாமாவை நிராகரித்து, அவரை சமாதானப்படுத்தி மீண்டும் பெர்சத்து செயல் தலைவர் பதவியை ஏற்க ஒப்புக்கொள்ளவைத்தனர்.

பெர்சத்து செயல் தலைவராக மகாதீர் நீடிப்பார் என்று பெர்சத்து பொதுச்செயலாளர் மர்சுகி யஹ்யா பிப்ரவரி 27 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

எவ்வாறாயினும், முகிதீன் தனது அறிக்கையில் இந்த உண்மையை புறக்கணித்து, மகாதீர் ராஜினாமா செய்ததாகவும், எனவே அவர் (முகிதீன்) கட்சித் தலைவராகவும், செயல் தலைவராகவும் இருப்பதாகக் கூறினார்.

“மகாதீர் பிப்ரவரி 24 அன்று பெர்சத்து செயல் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பெர்சத்து அரசியலமைப்பின் பிரிவு 16.9 இன் படி, கட்சியின் செயல் தலைவர் பதவி விலகினால் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டால், ஒரு புதிய செயல் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை தலைவர் அப்பதவியை வகிப்பார். பெர்சத்து புதிய செயல் தலைவருக்கான தேர்தலை நடத்தும். எனவே, கட்சித் தலைவராகிய நான் தேர்தல் வரை பெர்சத்துவின் செயல் தலைவராகவும் இருப்பேன்” என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பெர்சத்து கட்சியின் மிக சக்திவாய்ந்த பதவியாக செயல் தலைவர் பதவி இருப்பதால், முகிதீன் கட்சியை தன் கட்டுப்பாட்டில் கைப்பற்றி வைத்துக்கொள்ளவே இந்த சூத்திர நடவடிக்கை, எனத் தெரிகிறது.

பெர்சத்து பொதுச் செயலாளர், டாக்டர் மகாதீர்தான் செயல் தலைவர் என அறிவித்தார்

இதனிடையே, பெர்சத்து கட்சியின் செயல் தலைவராக மகாதீரை மீண்டும் வலியுறுத்தினார் பொதுச் செயலாளர் மர்சுகி.

“சட்டத்தின் ஆட்சி மற்றும் கட்சி அரசியலமைப்பின் கொள்கைகளுக்கு ஏற்ப, கட்சியை வழிநடத்த முழுமையான அதிகாரம் கொண்ட ஒரே நபர் பெர்சத்து செயல் தலைவர் டாக்டர் மகாதீர் முகமது மட்டுமே.

“எனவே, கட்சி நடவடிக்கைகள் மற்றும் வழிநடத்துதல் பெர்சத்து செயல் தலைவரின் முடிவுக்கு உட்பட்டது” என்று மர்சுகி கூறினார்.

பெரும் ஊழலுக்காக விசாரணையை எதிர்கொள்ளும் பல அம்னோ தலைவர்களுடன் அரசாங்கத்தை அமைப்பதற்கான முகிதீனின் முயற்சியைத் தடுக்க மகாதீர் முயற்சிக்கிறார்.

இன்று காலை, மகாதீர் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக ஹராப்பானுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார். மகாதீரின் இந்த நடவடிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரிக்காத்தான் நேஷனல் (Perikatan Nasional) கூட்டணியை அமைப்பதற்கான முகிதீனின் திட்டத்தை முறியடித்துள்ளார் மகாதீர்.

பெரிக்காத்தான் நேஷனல் (Perikatan Nasional) கூட்டணி – பெர்சத்து, கோம்பக் எம்.பி. அஸ்மின் அலி மற்றும் குழுவினர், பி.என்., பாஸ், ஜி.பி.எஸ் மற்றும் வாரீசன் ஆகியவற்றை கொண்டிருக்கும்.

மகாதீரின் பெர்சத்து எம்.பி.க்களின் மீதான கட்டுப்பாட்டை தடுக்கும் நோக்கில் தோன்றுகிறது முகிதீனின் நடவடிக்கை.

ஹராப்பானின் ஆதரவைப் பெற்ற பின்னர், மகாதீர் இப்போது பெர்சத்து, ஜி.பி.எஸ் மற்றும் வாரிசன் ஆகியோரையும் தம்மை ஆதரிக்க முயற்சிக்கிறார்.