மலேசியாவின் 8வது பிரதமராகிறார் முகிதீன்

மலேசியாவின் 8வது பிரதமராகிறார் முகிதீன்

மாமன்னர் யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா முகிதீன் யாசினை புதிய பிரதமராக நியமித்துள்ளார்.

மாமன்னர் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பாராளுமன்ற உறுப்பினர்களை நேர்காணல் செய்ததோடு, இன்று முன்னதாக கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்துள்ளார்.

மத்திய அரசியலமைப்பின் பிரிவு 40 (2) (a) மற்றும் பிரிவு 43 (2) (a)/Article 40(2)(a) and Article 43(2)(a) of the Federal Constitution ஆகியவற்றின் படி மாமன்னர் யாங் டி-பெர்துவான் அகோங் முகிதீனை பிரதமராக நியமித்துள்ளார்.

பதவியேற்பு நாளை காலை 10.30 மணிக்கு இஸ்தானா நெகாராவில் நடைபெறும் என்று அரண்மனையின் அஹ்மத் ஃபாடில் தெரிவித்தார்.

“நாட்டுக்கும், மக்களுக்கும் மற்றும் நாம் விரும்பும் நாட்டின் நல்வாழ்வுக்கும் ஒரு அரசாங்கம் தேவைப்படுகிறது. ஆகையால், பிரதமரின் நியமனம் தாமதப்படுத்த முடியாது என்று மாமன்னர் ஆணையிட்டுள்ளார்.

“இது அனைவருக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்று மாமன்னர் தெரிவித்தார். மேலும் அரசியல் நெருக்கடி ஒரு முடிவுக்கு வரும் என்றும் அவர் நம்புகிறார்,” என்று அவர் கூறினார்.

மகாதீர் முகமட் இன்று காலை அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான எண்ணிக்கை இருப்பதாகக் கூறியதைப் போலவே இந்த நியமனம் அமைந்துள்ளது.

பக்காத்தான் ஹராப்பானும், வாரிசனும் மகாதீருக்கு ஆதரவை வெளிப்படுத்திய பின்னரும் இது நடந்துள்ளது.

முகிதீன் பெர்சத்து கட்சியை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயன்றார். ஆனால் சில பெர்சத்து எம்.பி.க்கள் மகாதீருக்கு ஆதரவளித்தனர்.