மலேசியாவில் கோவிட்-19: 29 பாதிப்புகள்

மலேசியாவில் கோவிட்-19: இப்போது 29 பாதிப்புகள்

கொரோனா வைரஸ் | மலேசியா நான்கு புதிய கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. இது பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையை 29 ஆகக் கொண்டு வந்துள்ளது.

நான்கு புதிய பாதிப்புகளில் இரண்டு பாதிப்புகள் 24வது பாதிப்புக்காரரிடமிருந்து வந்துள்ளது. அவர் மலேசியாவில் பணிபுரியும் 41 வயதான ஜப்பானிய குடிமகன், அன்மையில் ஜப்பானுக்கு பயணம் செய்தவர்.

24வது நோயாளி, பிப்ரவரி 17 அன்று சிகிச்சை பெற்று, பிப்ரவரி 20 அன்று ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிப்ரவரி 27 அன்று கோவிட்-19க்கு அவர் உட்பட்டதாகப் பரிசோதிக்கப்பட்டார்.

அவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் 20 வயதான பயிற்சி தாதிக்கு நோயைப் பரப்பியுள்ளார்.

“அவர் (தாதி) நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டார். பிப்ரவரி 21 மற்றும் 22, 2020 அன்று, அவர் அறிவுறுத்தியபடி தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் நோயாளியைக் கையாண்டுள்ளார்.

“பிப்ரவரி 27 அன்று, அவரருக்கு இருமல் உண்டானது. கோவிட்-19க்கான சோதனை பிப்ரவரி 29 அன்று சாதகமாக வந்தது” என்று சுகாதார அமைச்சின் இயக்குனர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

24-ஆம் நோயாளி மற்றொரு தொற்றுநோய்க்கும் பங்களித்துள்ளார் – இது 29 பாதிப்பு ஆகும்.

29-ஆம் நோயாளி என்பவர், 35 வயதான மலேசியப் பெண். பிப்ரவரி 21 அன்று தனியார் மருத்துவமனையில் 24-ஆம் நோயாளியுடன் அதே அறையில் இவர் இருந்தார். அந்த நேரத்தில், 24-ஆம் நோயாளிக்கு கோவிட்-19 இருப்பது இன்னும் தெரியவில்லை.

“பிப்ரவரி 25 அன்று, அவர் (நோயாளி 29) வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார். பிப்ரவரி 27 அன்று, அவர் உடல்நிலை சரியில்லாமல், காய்ச்சல் மற்றும் இருமலுக்கு உட்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சை பெறவில்லை.

இதற்கிடையில், 26-ஆம் பாதிப்பு 52 வயதான மலேசிய நபர் ஒருவர் ஜனவரியில் சீனாவின் ஷாங்காய் சென்றுள்ளார்.

பிப்ரவரி 27 ஆம் தேதி காய்ச்சல் மற்றும் தொண்டை புண் நோயால் அவதிப்படத் தொடங்கிய அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் வெளிநோயாளிச் சிகிச்சையைப் பெற்றார். பிப்ரவரி 29 அன்று கோவிட்-19க்கு அவர் சோதனை செய்யப்பட்டு உறுதிபடுத்தப்பட்டார்.

28-ஆம் பாதிப்பு, 45 வயதான மலேசிய நபர் 25-ஆம் நோயாளியின் சக ஊழியராக இருந்தார். அவர்கள் இருவரும் வேலைக்காக பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 21 வரை இத்தாலிக்குச் சென்றிருந்தனர்.

25-ஆம் நோயாளி, மலேசியரை மணந்த ஒரு இத்தாலிய நபர், ஒரு நிரந்தர குடியிருப்பாளர் என்று அதிகாரிகள் கண்டறிந்த பின்னர், அவர்கள் தொடர்புத் தடமறியத் தொடங்கினர். 28-ஆம் நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராக அடையாளம் கண்டனர். பிப்ரவரி 29 அன்று அவர் கோவிட்-19 நோய்க்கு உட்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது.

நான்கு புதிய நோயாளிகளும் சுங்கை புலோ மருத்துவமனை தனிமைபடுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.