பாராளுமன்றத்தின் புதிய அமர்வு, தீர்மானிக்கப்படாத அமைச்சரவையால் தாமதமானது
Perikatan Nasional (PN)/பெரிகட்டன் நேஷனல் (பி.என்) அரசாங்கம் அடுத்த நாடாளுமன்ற அமர்வை மே 18 வரை இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளது. அதன் அமைச்சரவை வரிசை குறித்து முடிவு செய்ய அதிக நேரம் தேவைப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மார்ச் 9ம் தேதி அமர்வு எதிர்பார்கப்பட்டது.
“இந்த ஒத்திவைப்பு அமைச்சர்கள் மற்றும் துணை மந்திரிகளின் நியமனம் உறுதி செய்யப்படாமல் இருப்பதன் காரணியை கருத்தில் கொண்டது” என்று பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது.
புதிய அமைச்சரவைக்கு முறையே அமைச்சகங்கள் மற்றும் அவற்றின் துறைகளில் தங்கள் கடமைகளைப் புரிந்துகொள்ள சரியான காலக்கெடுவை அனுமதிக்க வேண்டியுள்ளது” என்று அது மேலும் கூறியுள்ளது. நாடாளுமன்றத்தில் பதிலளிக்க அமைச்சர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அது மேலும் கூறியது.
“இது பாராளுமன்றத்தில் சுமூகமான நிர்வாகத்தை உறுதி செய்யும்” என்று பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது.
“பாராளுமன்றமும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களால் மதிக்கப்பட வேண்டும்” என்றும் அது கூறியது.
வார இறுதியில் கவிழ்ந்த பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் முகிதீன் யாசின் சபையின் பெரும்பான்மை ஆதரவைக் பெறவில்லை என்ற தீர்மானத்தை முன்வைக்க திட்டமிட்டது.
டிஏபியின் ராம்கர்பால் சிங், யாருக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை தீர்மானிக்க அவசர அமர்வு அழைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
சபையில் எம்.பி.க்களை எதிர்கொள்ள முகிதீன் துணிந்துள்ளாரா என்று டிஏபியின் லனாங் எம்.பி. ஆலிஸ் லா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹராப்பான் மற்றும் முகிதீன் இரு தரப்புமே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாகக் கூறுகின்றனர்.