மகளிர் தினத்தை முன்னிட்டு தலைநகரில் பேரணிகள்
உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் சுமார் 300 பேர் இன்று தலைநகரத்தில் கூடியிருந்தனர்.
சோகோ ஷாப்பிங் சென்டர் முன் பல மக்கள் கூடியிருந்த நிலையில், ஓராங் அஸ்லி ஆர்வலர் உட்பட பலர் தங்கள் உரையை நிகழ்த்தினர்.
பின்னர் அவர்கள் சோகோவிலிருந்து சுதந்திர சதுக்கத்திற்கு பல்வேறு பதாகைகளை ஏந்திச் சென்றனர், மற்ற பேச்சாளர்கள் தங்கள் உரையைத் தொடர்ந்தனர்.
“ஆணாதிக்கத்தை அழித்தல்”, “வன்முறை மற்றும் அச்சுறுத்தலை ஒழித்தல்”, “எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்”, “எங்களுக்கு சமத்துவம் வேண்டும்”, “சிறார் திருமணங்களைத் தடைசெய்”, “அரசியல்வாதிகள் ஒழிக” என்ற பதாகை குரல்களை எழுப்பினர்.