கோவிட்-19: பயணக் கப்பல்களுக்கு மலேசியா தடை
கோவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து பயணக் கப்பல்கலின் வருகைக்கு மலேசியா விரிவான தடையை விதித்துள்ளது.
சுகாதார அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சின் உத்தரவைத் தொடர்ந்து இந்த தற்காலிக தடை உடனடியாக நடைமுறைக்கு வருவதாக ஸ்டார் நாளிதழ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பினாங்கு துறைமுக ஆணையமமும், கப்பல் உரிமையாளர்கள், துறைமுக அதிகாரிகள் மற்றும் தெர்மினல் ஆபரேட்டர்களுக்கும் சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
மேல் அறிவிப்பு வரும் வரை அனைத்து கப்பல்களும் எந்தவொரு மலேசிய துறைமுகத்திலும் நுழைவதை தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளதாக அந்த சுற்றறிக்கை தெரிவித்துள்ளது.
இதே அறிவிப்பை கிள்ளான் துறைமுக ஆணையமும் (LPK) வெளியிட்டுள்ளது.
“இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்றும், அனைத்து தரப்பினரின் ஒருங்கிணைந்த முயற்சியால், அது விரைவில் தீர்க்கப்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என்று LPK பொது மேலாளர் கேப்டன் கே.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸ், தைவான், ஹாங்காங் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கப்பல்களை தங்கள் துறைமுகங்களுக்குள் நுழைய தடை விதிக்கும் நாடுகளின் பட்டியலில் மலேசியா இணைகிறது.
பல கப்பல்களில் நோய்த்தொற்றுகள் பரவின, குறிப்பாக யோகோகாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட Princess Diamond சொகுசு கப்பல், இதில் நூற்றுக்கணக்கான நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு ஏழு இறப்புகளும் நிகழ்ந்தது.
சான் பிரான்சிஸ்கோவில் அனுமதிக்கப்ப்படாத பயணக் கப்பலான Grand Princess-ல் கொரோனா வைரஸுக்கு இருபத்தி ஒரு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.