பிப்ரவரி 24 அன்று 21 மாத பாக்காத்தான் ஹராப்பான் நிர்வாகம் வீழ்ந்ததைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பெரிகாத்தான் நேஷனல், அரசாங்கத்திற்கான தனது அமைச்சரவை வரிசையை பிரதமர் முகிதீன் யாசின் வெளியிட்டார்.
72 வயதான முகிதீன் ஒரு வார அரசியல் கொந்தளிப்பைத் தொடர்ந்து மார்ச் மாதம், மலேசியாவின் எட்டாவது பிரதமராக பதவியேற்றார். அவர் தனது கட்சியான பெர்சத்து, அம்னோ-பி.என், பாஸ் மற்றும் கபுங்கான் பார்ட்டி சரவாக் ஆகியவைகளிடம் இருந்து ஆதரவைப் பெற்றுள்ளார்.
பிரதமர் முகிதீன் யாசின் தனது அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பெயர்களை இன்று மாலை புத்ராஜெயாவில் வெளியிட்டார்.
“பொருளாதாரம், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, கல்வி மற்றும் சமூக பிரச்சினைகள் தொடர்பான அமைச்சரவையின் விவகாரங்களை ஒருங்கிணைக்க உதவும் நான்கு மூத்த அமைச்சர்களை நான் நியமித்துள்ளேன். இந்த மூத்த அமைச்சர்களின் நியமனம் அமைச்சகங்களுக்கும் மேற்கூறிய துறைகளுக்கும் இடையில் எழும் பிரச்சினைகளை மிகவும் பயனுள்ள முறையில் நெறிப்படுத்த உதவும். சுருக்கமாக, நான் ரக்யாட்டுக்கு (மக்களுக்கு) சிறந்த சேவையை வழங்கக்கூடிய ஒரு அமைச்சரவையை உருவாக்க விரும்புகிறேன்” என்று அவர் வலியுறுத்தினார்.

























