முகிதீன் அமைச்சரவையின் கண்ணோட்டம்
எட்டாவது பிரதமராக பதவியேற்ற ஒரு வாரத்திற்குப் பிறகு, முகிதீன் யாசின் தனது புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார்.
அமைச்சரவை எவ்வளவு பெரியது? எத்தனை பெண்கள்? பட்டியலிடப்படாத அரசியல் தலைவர் யார்?
இந்த அமைச்சரவை பெரிதா?
ஆம். டாக்டர் மகாதீர் முகமதுவின் அமைச்சரவையில் 27 அமைச்சர்கள் இருந்தனர். அவர்களில் டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் இரண்டு அமைச்சர் பதவிகளை வகித்தார். மகாதீர் 26 துணை அமைச்சர்களை நியமித்தார்.
முகிதீன் யாசின் அமைச்சரவையில் 32 அமைச்சர்கள் உள்ளனர். 38 துணை அமைச்சர்களையும் நியமித்துள்ளார். ஏழு அமைச்சகங்களுக்கு இரண்டு துணை அமைச்சர்கள் உள்ளனர்.
அமைச்சரவையில் யார் அரசியல்வாதி அல்ல?
புதிய பெரிகாத்தான் நேசனல் அரசாங்கம் அரசியல்வாதிகள் அல்லாத இருவரையும் அமைச்சரவையில் நியமித்துள்ளது. முன்னாள் சிஐஎம்பி (CIMB) குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெங்கு ஜப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ், 46 மற்றும் முன்னாள் கூட்டரசு பிரதேச மதத் தலைவர் (mufti) சுல்கிப்லி முகமட் அல்-பக்ரி, 51, ஆகியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செனட்டர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தெங்கு ஜாப்ருலுக்கு நிதித்துறையில் 24 வருட அனுபவம் உள்ளது, அதே நேரத்தில் சுல்கிப்லி 2014 முதல் மிதமான அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர்.
ஒரு கட்சிக்கு எத்தனை இடங்கள்?
நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் இரண்டாவது இடத்தில் இருந்தபோதிலும், பெர்சத்து பெரும்பான்மை அமைச்சரவை மற்றும் துணை அமைச்சர்களைக் கொண்டுள்ளது. அம்னோ இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சரவாக் கட்சி (ஜி.பி.எஸ்) கூட்டணி மூன்றாவது இடத்தில் உள்ளது என்றாலும் எம்.பி.க்களைப் பொறுத்தவரை இது பாஸ் கட்சியுடன் இணையாக உள்ளது.
பாஸ் மற்றும் ஜிபிஎஸ் இரண்டுமே 18 எம்.பி.க்களைக் கொண்டுள்ளன, ஆனால் சரவாக் கூட்டணி நான்கு அமைச்சரவை அமைச்சர்களைக் கொண்டுள்ளது, பாஸ் மூன்று பேரை மட்டுமே கொண்டுள்ளது.
மொத்தத்தில், பெர்சத்து இப்போது 11 அமைச்சர்களைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் அம்னோ ஒன்பது, ஜி.பி.எஸ் நான்கு, பாஸ் மூன்று, எம்சிஏ இரண்டு, எம்ஐசி ஒன்று மற்றும் பிபிஎஸ் ஒன்று.
துணை மந்திரிகளில், பெர்சத்து 14 பேரைக் கொண்டிருக்கிறது. அதன்பின் ஒன்பது பிரதிநிதிகளுடன் அம்னோவும், பாஸ் ஐந்து மந்திரிகளையும், ஜிபிஎஸ், எம்சிஏ தலா மூன்றும், பிபிஆர்எஸ் ஒன்றும் மற்றும் ஸ்டார் ஒன்றும் பெற்றுள்ளன.
எந்த மூத்த கட்சித் தலைவரை அமைச்சராக நியமிக்கவில்லை?
அம்னோ தலைவர் அகமட் ஜாஹித் ஹமிடி மற்றும் அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசன் இருவரும் அமைச்சரவையில் நியமிக்கப்படவில்லை.
அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட மூத்த அம்னோ தலைவர் நோரெய்னி அகமது (உயர்கல்வி அமைச்சர்) ஆவார். அவர் வனிதா அம்னோவின் தலைவராக உள்ளார்.
மூன்று அம்னோ துணைத் தலைவர்களில் ஒருவர் மட்டுமே பி.என் அரசாங்கத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்மாயில் சப்ரி யாகோப் தற்போது பாதுகாப்பு அமைச்சராக உள்ளார். அதே நேரத்தில் கலீத் நோர்டின் மற்றும் மஹ்த்சீர் காலித் ஆகியோர் அமைச்சரவையில் பட்டியலிடப்படவில்லை.
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் புதிய அரசாங்கத்தில் சேர்க்கப்படவில்லை, ஆனால் அவரது துணை துவான் இப்ராஹிம் துவான் மான் சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஸ் துணைத் தலைவர், திரெங்கானு மந்திரி புசார் அஹ்மத் சம்சூரி மொக்தார் மற்றும் கிளந்தான் துணை எம்பி முகமட் அமர் அப்துல்லா ஆகியோர் மாநில அரசுக்கு தலைமை தாங்குவதால் நியமிக்கப்படவில்லை என்பதில் ஆச்சரியமில்லை.
இருப்பினும், மாநில தலைமையை வகிக்காத மற்றொரு பாஸ் துணைத் தலைவர் இட்ரிஸ் அகமட், அமைச்சரவையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
நாட்டின் சட்டங்களை பாதிக்கக்கூடிய ஒரு முக்கியமான பதவியான சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சராக பாஸ் பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ம.இ.கா. தலைவர் எஸ். விக்னேஸ்வரனும் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. அவரது துணைத் தலைவர் எம்.சரவணன் மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜி.பி.எஸ்ஸைப் பொறுத்தவரை, பி.பி.பி. தலைவர் (அபாங் ஜோஹரி ஓபன்), பி.ஆர்.எஸ் (ஜேம்ஸ் மாசிங்) மற்றும் எஸ்.யு.பி.பி (சிம் குய் ஹியான்) ஆகியோர் ஏற்கனவே சரவாக் அமைச்சரவையின் ஒரு பகுதியாக இருப்பதால் அமைச்சரவையில் நியமிக்கப்படவில்லை.
தேசிய ஒற்றுமையின் துணை அமைச்சராக நியமிக்கப்பட்ட பி.டி.பி தலைவர் தியோங் கிங் சிங்கிற்கு இது விதிவிலக்கு.
அமைச்சரவையில் பெண்களின் விகிதம் என்ன?
ஐந்து பெண்கள் அமைச்சர்களாகவும் மற்றும் நான்கு துணை அமைச்சர்களும் உள்ளனர். முந்தைய அமைச்சரவையைப் போல இந்த எண்ணிக்கை மாறவில்லை.
எவ்வாறாயினும், அந்த நேரத்தில் டாக்டர் வான் அஜிசா இரண்டு அமைச்சரவை பதவிகளை வகித்தார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அஸ்மின் அலி குழுவிற்கு எத்தனை பதவிகள்?
பாக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ப்பிற்கு முன்னாள் பி.கே.ஆர் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி முக்கிய பங்கு வகித்தார்.
அஸ்மின் உட்பட, 10 எம்.பி.க்களின் “ஷெரட்டன் நகர்வை” தொடர்ந்து பி.கே.ஆரை விட்டு வெளியேறி பெர்சத்துவில் இணைந்தனர்.
முன்னாள் பி.கே.ஆர் எம்.பி.க்களின் இந்த குழுவில் இருந்து, அமைச்சராகவோ அல்லது துணை அமைச்சராகவோ இல்லாத ஒரே எம்.பி. ரஷீட் ஹஸ்னான் மட்டும் தான். ஆனாலும், ரஷீட் இன்னும் சபையின் துணைத் தலைவராக (timbalan Yang Dipertua Dewan Rakyat) இருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அஸ்மின் குழுவின் நியமனம் பின்வருமாறு:
அமைச்சர்:
அஸ்மின் அலி
சைபுதீன் அப்துல்லா
ஜுரைடா கமருதீன்
துணை அமைச்சர்:
அலி பிஜு
ஜொனாதன் யாசின்
கமருதீன் ஜாஃபர்
மன்சர் ஓத்மான்
சந்தாரா குமார்
வில்லி மோங்கின்
சபா, சரவாக்கிலிருந்து எத்தனை அமைச்சர்கள்?
சரவாகிலிருந்து நான்கு அமைச்சர்களும், சபாவிலிருந்து இரண்டு அமைச்சர்களும் உள்ளனர். கிழக்கு மலேசியாவிலிருந்து முந்தைய அமைச்சரவையில் நான்கு பேர் மட்டுமே இருந்தனர். இப்போது ஆறு அமைச்சர்கள் உள்ளனர்.
அமைச்சு கலைக்கப்பட்டதா? புதிய அமைச்சு இருக்கிறதா?
மிக முக்கியமாக, இந்த நேரத்தில் அமைச்சரவையில் துணை பிரதமர் இல்லை. இருப்பினும், முகிதீன் தனது துணை பிரதமரை பின்னர் கூட பெயரிட முடியும்.
பிரதம மந்திரி துறையின் தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருங்கிணைப்புத் துறையையும் (Jabatan Perpaduan Negara dan Integrasi Nasional di Jabatan Perdana Menteri) முகிதீன் ரத்து செய்து அதற்க்குப் பதிலாக தனது சொந்த தேசிய ஒற்றுமை அமைச்சகத்தை (Kementerian Perpaduan Negara) நியமித்தார்.
Empat kementerian pula sama ada dinamakan semula atau disatukan:
நான்கு அமைச்சகங்கள் மறுபெயரிடப்பட்டன அல்லது ஒருங்கிணைக்கப்பட்டன. அவை:
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சகம்
Kementerian Pertanian dan Industri Asas Tani
எரிசக்தி, தொழில்நுட்பம், அறிவியல், பருவநிலை மாற்றம் மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம்
Kementerian Tenaga, Teknologi, Sains, Perubahan Iklim dan Alam Sekitar
நீர், நிலம் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சகம்
Kementerian Air, Tanah dan Sumber Asli
முதன்மை தொழில் அமைச்சு.
Kementerian Industri Utama.