பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்கிறார் அன்னுவார்
புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, 15வது பொதுத் தேர்தல் வரை பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி (பி.என்) அரசாங்கம் தாக்குபிடிக்காது என்று அம்னோ பொதுச்செயலாளர் அன்னுவார் மூசா தெளிவுபடுத்தினார்.
ஆகவே, முவாபாகத் நேஷனல் ஆரம்பத்தில் விரும்பியபடி, “முன் கதவு” வழியாக அரசாங்கத்தை அமைக்கும் வகையில் பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
“பாக்காத்தான் ஹராப்பானால் ஏற்பட்ட சேதங்களும், கோவிட்-19 பாதிப்பும் தணிந்தவுடன், முவாபாக்கட் நேஷனல் செய்ய விரும்பியதைப் போலவே, பாராளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் உடனடியாக முன் கதவு திறக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்”.
“நாங்கள் அதை மக்களிடமே விட்டுவிடுகிறோம். இந்த டிஏபி கும்பலை மக்கள் எந்த அளவிற்கு விரும்புகிறார்கள் என்று பார்ப்போம்” என்று அவர் ட்விட்டரில் எழுதியுள்ளார்.
நேற்று கூட்டரசுபிரதேச அமைச்சராக பதவியேற்ற அன்னுவார், பெரிகாத்தான் நேசனல் பின் கதவு வழியாக அரசாங்கத்தை அமைத்ததாகக் கூரும் தாக்குதல்களைத் தொடர்ந்து அவர் இதை கூறினார்.
பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கிய ‘ஷெரட்டன் நகர்வு, PH அரசாங்கத்தின் வீழ்ச்சியைக் கண்டது. பெர்சத்து ஒரு காலத்தில் PH-இன் ஒரு அங்கமாக இருந்தபோது, பாரிசான், பாஸ், அஸ்மின் அலி தலைமையிலான பல முன்னாள் பி.கே.ஆர். தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியது. புதிய அரசாங்கத்தை அமைக்க அக்கூட்டணிக்கு ஜி.பி.எஸ் ஆதரவும் உள்ளது.
பி.என் மற்றும் பாஸ் ஆரம்பத்தில் பெர்சத்துவின் தலைவர் டாக்டர் மகாதீர் முகமதுவை பிரதமராக ஆதரித்தன. ஆனால் ஏழாவது பிரதமரால் முன்மொழியப்பட்ட ஒற்றுமை அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு உடன்படாமல் அவை, தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றன.
பி.என் மற்றும் பாஸ் பின்னர் அரசாங்கத்திற்கு போட்டியிட ஒரு உடனடி தேர்தலுக்கு அழைப்பு விடுத்தன. ஆனால் பின்னர் பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசினை பிரதமராக ஆதரித்தனர்.
மார்ச் 1ம் தேதி எட்டாவது பிரதமராக பேரரசர் யாங் டி-பெர்டுவான் அகோங் முன் முகிதீன் பதவியேற்றார். இரண்டு நாட்களுக்கு முன்பு தனது அமைச்சரவையை அறிவித்தார்.
“பி.எச். தொடர்ந்து மற்றவர்களை குறை சொல்லக்கூடாது. அவர்களின் தவறுகளை அறிந்திருக்க வேண்டும்” என்று அன்னுவார் கூறினார்.
“அவர்கள் செய்த தவறை அவர்கள் ஒருபோதும் உணரவில்லை” என்று அவர் எழுதினார்.
முன்னதாக, PHஇன் உள் நெருக்கடியில், பி.கே.ஆரும் பெர்சத்துவும் மகாதீருக்கும் பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கும் இடையில் அதிகார மாற்றம் குறித்து அடிக்கடி உடன்படவில்லை.
ஆனால் PH கடைசி கூட்டம் நிபந்தனையின்றி மகாதீருக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற உடன்பாட்டை எட்டியது.
ஷெரட்டன் நகர்வுக்கு ஒரு நாள் கழித்து மகாதீர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பெரிக்காத்தான் நேசனலில் சேர தனது கட்சி எடுத்த முடிவை அவர் ஏற்கவில்லை.