மகாதீர் – முகிதீன், பெர்சத்து கட்சி தலைவர் பதவிக்கு போட்டியா?

மகாதீர் – முகிதீன், பெர்சத்து கட்சி தலைவர் பதவிக்கு போட்டியா?

அடுத்த மாதம் தனது புதிய தேசிய தலைமைக்கு மொத்தம் 189 பெர்சத்து தொகுதிகள் வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது பெர்சத்து செயல் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் அதன் தலைவர் முகிதீன் யாசின் ஆகியோருக்கு இடையிலான மோதலின் புதிய தலமாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

பாக்காத்தான் அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, டாக்டர் மகாதீர் கட்சி உறுப்பினர்களை அடிப்படையாகக் கொண்டிராத தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட புதிய அரசாங்கத்தை உருவாக்க விரும்பினார். ஆனால் சில பி.கே.ஆர் எம்.பி.க்கள், பி.என் எம்.பி.க்கள், பாஸ், ஜிபிஎஸ் மற்றும் பிற சிறுபான்மை கட்சிகளுடன் சேர்ந்து மகாதீரின் திட்டத்தை முறியடிப்பதில் முகிதீன் வெற்றி பெற்றார்.

மார்ச் 1-ம் தேதி எட்டாவது பிரதமராக பதவியேற்ற முகிதீன், பெர்சத்துவின் செயல் தலைவராக பொறுப்பேற்றதன் மூலம் பெர்சத்துவை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முயன்றார்; மகாதீரின் தலைவர் பதவியை நிராகரித்தார்.

பிப்ரவரி 24ம் தேதி மகாதீர் பெர்சத்து கட்சி செயல் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார், ஆனால் அவர் அப்பதவியை வகிக்குமாறு கட்சி அவருக்கு உறுதி கொடுத்தபோது, அவர் ஒப்புக்கொண்டார்.

பெர்சத்து பொதுச்செயலாளர் மர்சுகி யஹ்யா பிப்ரவரி 27 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் டாக்டர் மகாதீர் இன்னும் கட்சியின் செயல் தலைவராக இருப்பதை உறுதிப்படுத்தினார்.

பெர்சத்துவின் கட்டுப்பாட்டை கைப்பெறும் முயற்சியில் முகிதீன் பிப்ரவரி 29 அன்று பெர்சத்துவின் செயல் தலைவராக தன்னைத் தானே அறிவித்தார். பிப்ரவரி 27 அன்று வெளியிடப்பட்ட கட்சியின் பொதுச்செயலாளரின் அறிக்கையை புறக்கணித்தார்.

கட்சியின் மிக உயர்ந்த பதவியை வகிக்க முகிதீன் செய்த நடவடிக்கை, அந்த பதவி குறித்து இப்போது சர்ச்சை எழுந்துள்ளது எனப்படுகிறது.

இருப்பினும், இந்த சர்ச்சை நீடிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள கட்சித் தேர்தலில், பெர்சத்து உறுப்பினர்கள் தங்கள் தலைமை பதவிகளுக்கு வாக்களிக்க உள்ளனர்.

மகாதீரின் தரப்பில் இருந்த ஒரு பார்வையாளர், முன்னாள் பிரதமர் மகாதீர் இந்த கட்சித் தேர்தலில் எளிதில் தோற்க மாட்டார் என்றும், முகிதீன் அவருக்கு முறையாக சவால் விட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

3 உயர் பதவிகாளுக்கு போட்டி

பெர்சத்து, கட்சியின் முதல் மூன்று பதவிகள் உட்பட அனைத்து தலைமைப் பதவிகளுக்கும் போட்டி உண்டு என்று தெரிகிறது.

முகிதீன் மகாதீருக்கு சவால் விடுத்தாரா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, தன்னை “முதுகில் குத்தியதாக” கூறப்படும் முகிதீனை வெளியேற்றுவதில் உறுதியாக இருக்கிறார் மகாதீர்.

வரும் ஏப்ரல் 18-ம் தேதி, தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதில் மகாதீர் வெற்றி பெற்றால், பெரிக்காத்தான் கூட்டணியின் புதிய அரசாங்கம் மே 18 பாராளுமன்ற அமர்வுக்கு முன்பே சவால் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“துன் டாக்டர் மகாதீர் வென்றால், அவர் பெர்சத்துவை பெரிக்காத்தானிலிருந்து வெளியே கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

அம்னோ தலைவர்களில் சிலர் ஊழல் குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளதால், அம்னோவுடன் புதிய அரசாங்கம் அமைப்பதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தார் மகாதீர்.

இருப்பினும், தனது நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் எம்.ஏ.சி.சி-யிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் என்றும் நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதும் சுமத்தப்படவில்லை என்றும் முகிதீன் வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும், அமைச்சரவை பதவி இல்லாமலும் கூட அம்னோ தலைவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து வருவதை மகாதீர் விரும்பவில்லை.

அடுத்த வாரத்திற்குள் வேட்பாளர்களின் பட்டியல் பெயரிடப்படும்போது, போட்டியின் தெளிவான நிலை தெரிய வரும்.

பல்வேறு பதவிகளுக்கான உறுதிபடுத்தப்பட்ட பெர்சத்து வேட்பாளர்களின் பெயர்கள் மார்ச் 23 அன்று அறிவிக்கப்படும்.