இன்று நண்பகல் வரை கோவிட்-19 இன் 41 புதிய பாதிப்புகளை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இப்போது நாட்டில் மொத்தம் 238 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
சுகாதார அமைச்சு, 203 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், ஐந்து நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு உட்பட்டுள்ளனர் மற்றும் அவர்களுக்கு சுவாச சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
தனது அறிக்கையில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மேலும் இரண்டு கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
அவர்கள் 35 மற்றும் 61 வது நோயாளிகளாவ. இதுவரை மொத்தம் 35 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ பெட்டாலிங் மசூதி தற்காலிகமாக பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளதாக நூர் ஹிஷாம் ட்விட்டர் மூலம் தெரிவித்தார். மசூதி சுத்தம் செய்வதற்காக மூடப்பட்டிருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
“மசூதியில் உள்ள மாணவர்கள் மற்றும் மசூதியில் இருந்த யாத்ரீகர்களும் வீட்டு கண்காணிப்பு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். கிருமிநாசினியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை மசூதியில் நடைபெற்ற இஜ்மா நிகழ்ச்சியில் 16,000 பேர் கலந்து கொண்டதாக சுகாதார அமைச்சகம் முன்பு மதிப்பிட்டிருந்தது.
அவர்களில், சுமார் 14,500 பேர் மலேசியர்கள் என்று நம்பப்படுகிறது.